»   »  டெல்லியில் துவங்கி சென்னையில் முடிந்த ஜோதிகா படத்தின் ஷூட்டிங்

டெல்லியில் துவங்கி சென்னையில் முடிந்த ஜோதிகா படத்தின் ஷூட்டிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆண்டுகள் கழித்து ஜோதிகா நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு ஓய்வு விட்டிருந்தார். இந்நிலையில் தான் 2 குழந்தைகளின் தாயான ஜோதிகாவுக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது.

தனது ஆசையை சூர்யாவிடம் தெரிவித்தார் ஜோதிகா.

ஹவ் ஓல்டு ஆர் யூ

ஹவ் ஓல்டு ஆர் யூ

மலையாள திரை உலகில் கொடிகட்டிப் பறந்த மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் திலீப்பை பிரிந்த மஞ்சு பல காலம் கழித்து நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

சூர்யா

சூர்யா

மஞ்சு நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து ரீமேக் செய்யுமாறு அந்த படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸை சூர்யா கேட்டார். அவரும் சம்மதித்தார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ரோஷன் சென்னை வந்தார் படப்பிடிப்பை துவங்கி மளமளவென நடத்தினார். ஜோதிகாவும் தனக்கு வலுவான கதாபாத்திரம் கிடைத்த சந்தோஷத்தில் குஷியாக நடித்தார், டெல்லியில் துவங்கிய படப்பிடிப்பு சென்னையில் உள்ள சோலிங்கநல்லூரில் நிறைவடைந்துள்ளது. 46 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிராமி

அபிராமி

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஹ்மானும் நடித்துள்ளார். ஜோதிகா வருவாய்த்துறை அலுவலகத்தில் பணிபுரிபவராக நடித்துள்ளார்.

இந்தி, கன்னடம்

இந்தி, கன்னடம்

ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் அனைத்து மொழிகளுக்குமான ரீமேக் உரிமையை சூர்யா வாங்கியுள்ளார். படத்தை இந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சூர்யா.

English summary
The shooting of yet-untitled Tamil remake of Malayalam hit "How Old Are You", which stars actress Jyothika in a comeback role, has been wrapped up. It may release in the summer.
Please Wait while comments are loading...