ஜோதிர்மயியுடன் ஜோடி போடும் சுந்தர்.சி மலையாளத்து மாம்பழம் ஜோதிர்மயியுடன் ஜோடி போட்டு ஹீரோவாக நடிக்கப் போகிறார் குஷ்பு மணாளன் சுந்தர்.சி.நடிகர்கள் இயக்குனர்களாகவும் கொடி கட்டிப் பறந்தது அந்தக் காலம். ஆனால் இப்போது அது தலைகீழாகியுள்ளது.இயக்குனர்களே ஹீரோக்களாக வேடம் போட்டுக் கலக்க ஆரம்பித்து விட்டனர்.சேரன், எஸ்.ஜே.சூர்யா, தங்கர்பச்சான் ஆகியோருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்த பல இயக்குனர்களுக்கு, தாங்களும்ஹீரோக்களாகி விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.தம்பி படத்தில் இயக்குனர் சீமான் லேசாக தலை காட்டியுள்ளார். அடுத்து ஒரு முழு நீளப் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.இந்த வரிசையில் தனது கணவர் சுந்தரையும் எப்படியாவது ஹீரோவாக்கிவிட வேண்டும் என்று ஆலாய் பறந்தார் கற்பு புகழ்குஷ்பு.தானே படத்தைத் தயாரிக்கவும் தயாராகி சுந்தரின் உடம்பையும் குறைக்க வைத்து ட்ரிம் ஆக்கினார். ஆனால், கற்புவிவகாரத்தில் சிக்கலான நிலையில் உள்ள நாம் தயாரித்தால் படத்தை யாரும் வாங்க மாட்டார்கள் என்று பயந்த குஷ்பு சொந்தப்பட திட்டத்தை விட்டுவிட்டு தயாரிப்பாளரைத் தேடினாராம்.அந்த வகையில் சுந்தரைப் போட்டு படம் தயாரிக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முன் வந்துள்ளார். இந்தப் படத்திற்குதலைநகரம் என்று பெயர் வைத்துள்ளனர். வித்தியாசமான கதையுடன் தயாராகப் போகும் தலைநகரத்தில் சுந்தருக்கு ஜோடியாக நடிப்பவர் ஜோதிர்மயி. மலையாளத்துசிட்டான ஜோதிர்மயி, தமிழில் மேலும் சில படங்களில் தலை காட்ட புக் ஆகியுள்ளது உங்களுக்குத் தெரிந்தது.முதலில் கற்பு பிரச்சனையால் குஷ்புவின் கணவர் சுந்தருடன் ஜோடி சேர எந்த நடிகையும் முன் வரவில்லை. இதையடுத்து தனதுநண்பரான அர்ஜூன் மூலம் அவருக்கு நெருக்கமான ரீமா சென்னுடன் குஷ்பு பேசினார்.ஆனால், உங்கள் (அர்ஜூன்) படத்தில் (ஆணை படம்) நான் நடித்ததற்கு ரூ. 5 லட்சம் சம்பள பாக்கி இருக்கிறதே. முதலில் அதைத்தந்துவிட்டு பேசுங்க. எனக்கு சுந்தர் சியோ, சுந்தர் பியோ யாருடனும் ஜோடியாக நடிப்பதில் பிரச்சனையில்லை என்றாராம் ரீமா.இதையடுத்து ரீமாவை விட்டுவிடச் சொல்லிவிட்டாராம் அர்ஜூன். இதையடுத்து ஜோதிர்மயியிடம் குஷ்புவே பேசி ஒப்புக்கொள்ளச் செய்தாராம்.ஜோதிர்மயிக்கு கல்யாணமாகிவிட்ட செய்தி கோலிவுட்டில் அரசல் புரசலாகப் பேசப்பட்டாலும் அம்மணியின் வனப்பு பிளஸ்ஒத்துழைப்பால் அவருக்கு நிறையப் படங்கள் வந்து கொண்டுள்ளனவாம்.தமிழில் ஆழமாக காலூன்றும் வைராக்கியத்தில் இருக்கும் ஜோதிர்மயி பெரும்பாலான வாய்ப்புக்களை உடனே ஒப்புக் கொண்டுவருகிறார். பார்த்திபன் மாதிரியான ஆட்கள் குறித்துத் தான் கொஞ்சம் யோசித்து பதில் தருகிறார். கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கலக்கி விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கும் ஜோதிர்மயி, சுந்தருடன்நடிக்கப் பாகும் தலைநகரம் படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறாராம்.இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்கப் போகிறாராம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதற்கு முன் எடுத்து அந்நியன்நன்றாக ஓடிய தெம்பில் இருக்கும் ரவிச்சந்திரன் இப்போது தலைநகரத்தையும் பிரமாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.படத்தில் வில்லனாக குஷ்புவுக்கு மிக நெருக்கமான நண்பரான பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். காமெடிக்கு வடிவேலுவைப்போட்டுவிட்டாராகள்.இசைக்கு இமானை வைத்துக் கொண்டு படத்தை இயக்கப் போகிறவர் சுராஜ். ஜனவரி 1ம் தேதி சூட்டிங்கைத் தொடங்கி பாடல்காட்சிகளை பாங்காங், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுடப் போகிறார்கள்.ஜோதிர்மயியை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது ஜோதிர்மயியுடன், சுந்தர் ஆடப் போகும் டூயட்டை நினைத்து பீதிஅடைவதா?கொசுறு:கொம்பு புகழ் சுகாசினி ஒரு டிவி தொடர் தயாரிக்கப் போகிறாராம். அதில் ஹீரோயின் கற்பு புகழ் குஷ்புவே தான்.

By Staff
மலையாளத்து மாம்பழம் ஜோதிர்மயியுடன் ஜோடி போட்டு ஹீரோவாக நடிக்கப் போகிறார் குஷ்பு மணாளன் சுந்தர்.சி.

நடிகர்கள் இயக்குனர்களாகவும் கொடி கட்டிப் பறந்தது அந்தக் காலம். ஆனால் இப்போது அது தலைகீழாகியுள்ளது.இயக்குனர்களே ஹீரோக்களாக வேடம் போட்டுக் கலக்க ஆரம்பித்து விட்டனர்.

சேரன், எஸ்.ஜே.சூர்யா, தங்கர்பச்சான் ஆகியோருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்த பல இயக்குனர்களுக்கு, தாங்களும்ஹீரோக்களாகி விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தம்பி படத்தில் இயக்குனர் சீமான் லேசாக தலை காட்டியுள்ளார். அடுத்து ஒரு முழு நீளப் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.இந்த வரிசையில் தனது கணவர் சுந்தரையும் எப்படியாவது ஹீரோவாக்கிவிட வேண்டும் என்று ஆலாய் பறந்தார் கற்பு புகழ்குஷ்பு.

தானே படத்தைத் தயாரிக்கவும் தயாராகி சுந்தரின் உடம்பையும் குறைக்க வைத்து ட்ரிம் ஆக்கினார். ஆனால், கற்புவிவகாரத்தில் சிக்கலான நிலையில் உள்ள நாம் தயாரித்தால் படத்தை யாரும் வாங்க மாட்டார்கள் என்று பயந்த குஷ்பு சொந்தப்பட திட்டத்தை விட்டுவிட்டு தயாரிப்பாளரைத் தேடினாராம்.

அந்த வகையில் சுந்தரைப் போட்டு படம் தயாரிக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முன் வந்துள்ளார். இந்தப் படத்திற்குதலைநகரம் என்று பெயர் வைத்துள்ளனர்.

வித்தியாசமான கதையுடன் தயாராகப் போகும் தலைநகரத்தில் சுந்தருக்கு ஜோடியாக நடிப்பவர் ஜோதிர்மயி. மலையாளத்துசிட்டான ஜோதிர்மயி, தமிழில் மேலும் சில படங்களில் தலை காட்ட புக் ஆகியுள்ளது உங்களுக்குத் தெரிந்தது.

முதலில் கற்பு பிரச்சனையால் குஷ்புவின் கணவர் சுந்தருடன் ஜோடி சேர எந்த நடிகையும் முன் வரவில்லை. இதையடுத்து தனதுநண்பரான அர்ஜூன் மூலம் அவருக்கு நெருக்கமான ரீமா சென்னுடன் குஷ்பு பேசினார்.

ஆனால், உங்கள் (அர்ஜூன்) படத்தில் (ஆணை படம்) நான் நடித்ததற்கு ரூ. 5 லட்சம் சம்பள பாக்கி இருக்கிறதே. முதலில் அதைத்தந்துவிட்டு பேசுங்க. எனக்கு சுந்தர் சியோ, சுந்தர் பியோ யாருடனும் ஜோடியாக நடிப்பதில் பிரச்சனையில்லை என்றாராம் ரீமா.

இதையடுத்து ரீமாவை விட்டுவிடச் சொல்லிவிட்டாராம் அர்ஜூன். இதையடுத்து ஜோதிர்மயியிடம் குஷ்புவே பேசி ஒப்புக்கொள்ளச் செய்தாராம்.

ஜோதிர்மயிக்கு கல்யாணமாகிவிட்ட செய்தி கோலிவுட்டில் அரசல் புரசலாகப் பேசப்பட்டாலும் அம்மணியின் வனப்பு பிளஸ்ஒத்துழைப்பால் அவருக்கு நிறையப் படங்கள் வந்து கொண்டுள்ளனவாம்.

தமிழில் ஆழமாக காலூன்றும் வைராக்கியத்தில் இருக்கும் ஜோதிர்மயி பெரும்பாலான வாய்ப்புக்களை உடனே ஒப்புக் கொண்டுவருகிறார். பார்த்திபன் மாதிரியான ஆட்கள் குறித்துத் தான் கொஞ்சம் யோசித்து பதில் தருகிறார்.

கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கலக்கி விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கும் ஜோதிர்மயி, சுந்தருடன்நடிக்கப் பாகும் தலைநகரம் படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறாராம்.

இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்கப் போகிறாராம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதற்கு முன் எடுத்து அந்நியன்நன்றாக ஓடிய தெம்பில் இருக்கும் ரவிச்சந்திரன் இப்போது தலைநகரத்தையும் பிரமாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

படத்தில் வில்லனாக குஷ்புவுக்கு மிக நெருக்கமான நண்பரான பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். காமெடிக்கு வடிவேலுவைப்போட்டுவிட்டாராகள்.

இசைக்கு இமானை வைத்துக் கொண்டு படத்தை இயக்கப் போகிறவர் சுராஜ். ஜனவரி 1ம் தேதி சூட்டிங்கைத் தொடங்கி பாடல்காட்சிகளை பாங்காங், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுடப் போகிறார்கள்.

ஜோதிர்மயியை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது ஜோதிர்மயியுடன், சுந்தர் ஆடப் போகும் டூயட்டை நினைத்து பீதிஅடைவதா?

கொசுறு:

கொம்பு புகழ் சுகாசினி ஒரு டிவி தொடர் தயாரிக்கப் போகிறாராம். அதில் ஹீரோயின் கற்பு புகழ் குஷ்புவே தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X