செம சாப்பாடு போல.. காத்துவாக்குல ரெண்டு காதல் டீமுடன் நயன்தாரா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் உட்பட காத்துவாக்குல ரெண்டு காதல் டீம் ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரலாகி வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டியோஸின் லலித்குமார், ரவுடி பிக்சர்ஸின் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி பூஜையோடு தொடங்கியது.

நயன்தாரா போட்டோ
இளைஞர்களின் பல்ஸ்க்கு ஏற்ப எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நயன்தாரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சாப்பிடும் போட்டோ..
அதில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உட்பட காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவை சேர்ந்த அனைவரும் ஹோட்டலில் அமர்ந்து லஞ்ச் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். அந்த போட்டோவுக்கு #KaathuVaakulaRenduKaadhal TeamKRK என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் நயன்.

சமந்தா எங்கே?
இந்த போட்டோவை பார்த்த பலரும் நயன்தாரா மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் டீமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் ரசிகர்கள் எங்கே சமந்தாவை காணோம்? அவரை விட்டுவிட்டு சாப்பிடுகிறீர்களா என்றும் கிண்டலடித்துள்ளனர்.

ட்ரெண்டாகும் போட்டோ
நயன்தாரா எந்த போட்டோவை ஷேர் செய்தாலும் வைரலாகி வருகிறது. ஓணம் செலிபிரேஷன், கோவா டூர் என இந்த ஆண்டில் நயன்தாராவின் ஏராளமான போட்டோக்கள் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த வகையில் இந்த போட்டோவும் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











