கார்த்தி-மணி ரத்னத்தின் 'காற்று வெளியிடை'... ஊட்டி ஷெட்யூல் ஓவர்!
சென்னை: மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
கார்த்தி, அதிதி ராவ், ஸ்ரதா ஸ்ரீநாத், ருக்மணி, டெல்லி கணேஷ், விபின் சர்மா, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் படம் 'காற்று வெளியிடை'.
காதலை மையமாகக் கொண்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

காஷ்மீர்
அடுத்ததாக காஷ்மீர் சென்று அங்கு பாடல்கள் மற்றும் படத்தில் இடம்பெறும் சில திருப்புமுனைக் காட்சிகளை படம்பிடிக்கவுள்ளனர். இதற்காக படக்குழு விரைவில் காஷ்மீர் செல்லவுள்ளது.

பைலட்
கார்த்தி பைலட்டாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மணிரத்னம் தனது 'மெட்ராஸ் டாக்கீஸ்' சார்பில் சொந்தமாகத் தயாரித்து வருகிறார்.

ருக்மணி
'பொம்மலாட்டம்', 'ஆனந்தத் தாண்டவம்' படங்களில் நடித்த ருக்மணி காற்று வெளியிடையில் முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார். படத்தின் கதை பிடித்தால் மட்டுமே ஒப்புக் கொள்ளும் ருக்மணி இதில் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு படத்தின் கதை ருக்மணியை சுற்றி பின்னப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

ரஞ்சித்
படப்பிடிப்பை விரைவாக முடித்து இந்த வருட இறுதியில் காற்று வெளியிடையை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மணிரத்னம் படத்துக்குப் பின் 'மெட்ராஸ்' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











