twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தும்தரக்கர சீயாங்கோ... பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10.30 வரை சின்னப் புள்ள கல்யாணி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பெயர்தான் இது. படம்முழுக்க காமெடியும், காம நெடியும் கரை புரண்டு ஓடுகிறதாம்.படத்தோட ஸ்டில்கள் கோலிவுட்டை கொப்பளிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில்படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பி வைத்தனராம். படத்தைப் பார்த்த சென்சார்அதிகாரிகள், ஏ சான்றிதழைக் கொடுத்து படம் பலானதாக இருந்தாலும் நல்ல மெசேஜ்வைத்திருக்கீங்க, குட் என்று பாராட்டவும் செய்தார்களாம்.பலான சீன்கள் இருந்தும் பாராட்டா என்று ஜெர்க் ஆகி இயக்குனர் அன்புவிடம்கேள்வியை செருகினோம்.ஹலோ, பாஸ் நீங்க நினைப்பது மாதிரி இது பலான படம் கிடையாது. ஸ்டில்ஸைவைத்து எதையும் எடை போடக் கூடாது.இளைஞர்களுக்கான படம் இது. அவர்களுக்கான அருமையான செய்தியை நாங்கள்இதில் சொல்லியுள்ளோம். படிப்பை விட்டு விட்டு தவறான வழிக்குப் போகும் யாரும்உருப்படுவதில்லை என்பதுதான் நாங்கள் சொல்லியுள்ள மெசேஜ். இதைத் தான்சென்சார் அதிகாரிகள் மனதார பாராட்டினர் என்று விளக்கினார்.அன்பு, பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். இந்த பிரதி ஞாயிறு படத்தின்ஹீரோவாக நடிப்பவர் புதுமுகமான சுரேஷ்.இவர்தான் நடிகை விசாலினின் தாயாரிடம் கந்து வட்டி வசூலிக்கப் போய் இப்போதுகம்பி எண்ணிக் கொண்டிருப்பவர்.படத்தில் பெரிய காமடிக் கும்பலே இருக்கிறதாம். கருணாஸ்தான் இந்த அலம்பலுக்குதலைவன். அவரோடு சூப்பர் 10 பாலாஜி, சாலை ரவி ஆகியோரும் சேர்ந்துகாமடியில் களேபரம் செய்துள்ளனராம். அவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து ஆடும்பாட்டுதான் சீயாங்கோ சிக்காங்கோ.இந்தப் பாட்டை கருணாஸே எழுதியுள்ளார். அவரே படத்திலும் பாடியும்,ஆடியுள்ளார். இந்தப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் கல்யாணி.முதலில் குத்துப் பாட்டுக்கான டிரஸ்ஸைப் போட்டு கொண்டு வந்து நிறுத்தியபோதுஅது சரியாக பொறுந்தவில்லையாம் கல்யாணிக்கு. பின்னர் காஸ்ட்யூம் டிசைனர்,மேக்கப்மேன் ஆகியோரை கூப்பிட்ட இயக்குனர் சில பல ஐடியாக்களை கொடுத்து,கல்யாணியை தூக்கலாக மாற்றியுள்ளார்.நம்ம கல்யாணியா இது என்று பார்ப்பவர்கள் பயந்து போகும் அளவுக்கு இடுப்பைஒடித்து அசத்தியுள்ளாராம் இந்தப் பாட்டில்.தும்தரக்கர தும்தரக்கர சீயாங்கோ சிக்காங்கோகோவில்பட்டி கோலாலம்பூர்போய்ட்டு வந்தேங்கோஇவ்வாறு இலக்கிய மணத்துடன் ஆரம்பித்துப் போகிறதாம் பாட்டு.படம் தும்தரக்கர சீயாங்கோ ஆகிறாம ஓடுனா சரி..இந்தப் படத்திலிருந்து கல்யாணியின் பெயர் பூர்ணிதா என்று மாறிவிட்டதைஏற்கனவே உங்களுக்கு சொல்லிவிட்டோம்.

    By Staff
    |

    பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10.30 வரை

    சின்னப் புள்ள கல்யாணி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பெயர்தான் இது. படம்முழுக்க காமெடியும், காம நெடியும் கரை புரண்டு ஓடுகிறதாம்.

    படத்தோட ஸ்டில்கள் கோலிவுட்டை கொப்பளிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில்படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பி வைத்தனராம். படத்தைப் பார்த்த சென்சார்அதிகாரிகள், ஏ சான்றிதழைக் கொடுத்து படம் பலானதாக இருந்தாலும் நல்ல மெசேஜ்வைத்திருக்கீங்க, குட் என்று பாராட்டவும் செய்தார்களாம்.

    பலான சீன்கள் இருந்தும் பாராட்டா என்று ஜெர்க் ஆகி இயக்குனர் அன்புவிடம்கேள்வியை செருகினோம்.

    ஹலோ, பாஸ் நீங்க நினைப்பது மாதிரி இது பலான படம் கிடையாது. ஸ்டில்ஸைவைத்து எதையும் எடை போடக் கூடாது.

    இளைஞர்களுக்கான படம் இது. அவர்களுக்கான அருமையான செய்தியை நாங்கள்இதில் சொல்லியுள்ளோம். படிப்பை விட்டு விட்டு தவறான வழிக்குப் போகும் யாரும்உருப்படுவதில்லை என்பதுதான் நாங்கள் சொல்லியுள்ள மெசேஜ். இதைத் தான்சென்சார் அதிகாரிகள் மனதார பாராட்டினர் என்று விளக்கினார்.

    அன்பு, பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். இந்த பிரதி ஞாயிறு படத்தின்ஹீரோவாக நடிப்பவர் புதுமுகமான சுரேஷ்.

    இவர்தான் நடிகை விசாலினின் தாயாரிடம் கந்து வட்டி வசூலிக்கப் போய் இப்போதுகம்பி எண்ணிக் கொண்டிருப்பவர்.

    படத்தில் பெரிய காமடிக் கும்பலே இருக்கிறதாம். கருணாஸ்தான் இந்த அலம்பலுக்குதலைவன். அவரோடு சூப்பர் 10 பாலாஜி, சாலை ரவி ஆகியோரும் சேர்ந்துகாமடியில் களேபரம் செய்துள்ளனராம். அவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து ஆடும்பாட்டுதான் சீயாங்கோ சிக்காங்கோ.

    இந்தப் பாட்டை கருணாஸே எழுதியுள்ளார். அவரே படத்திலும் பாடியும்,ஆடியுள்ளார். இந்தப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் கல்யாணி.

    முதலில் குத்துப் பாட்டுக்கான டிரஸ்ஸைப் போட்டு கொண்டு வந்து நிறுத்தியபோதுஅது சரியாக பொறுந்தவில்லையாம் கல்யாணிக்கு. பின்னர் காஸ்ட்யூம் டிசைனர்,மேக்கப்மேன் ஆகியோரை கூப்பிட்ட இயக்குனர் சில பல ஐடியாக்களை கொடுத்து,கல்யாணியை தூக்கலாக மாற்றியுள்ளார்.

    நம்ம கல்யாணியா இது என்று பார்ப்பவர்கள் பயந்து போகும் அளவுக்கு இடுப்பைஒடித்து அசத்தியுள்ளாராம் இந்தப் பாட்டில்.

    தும்தரக்கர தும்தரக்கர
    சீயாங்கோ சிக்காங்கோ
    கோவில்பட்டி கோலாலம்பூர்
    போய்ட்டு வந்தேங்கோ
    இவ்வாறு இலக்கிய மணத்துடன் ஆரம்பித்துப் போகிறதாம் பாட்டு.

    படம் தும்தரக்கர சீயாங்கோ ஆகிறாம ஓடுனா சரி..

    இந்தப் படத்திலிருந்து கல்யாணியின் பெயர் பூர்ணிதா என்று மாறிவிட்டதைஏற்கனவே உங்களுக்கு சொல்லிவிட்டோம்.

      Read more about: kalyanis new film
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X