சூட்டிங் ஸ்பாட்

By Staff

தேனி மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் "சண்டியர்" படத்தின்படிப்பிடிப்பு நடந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு முதலில் சண்டியர் என்றுபெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், குறிப்பிட்ட நேரத்தில், தேனிமாவட்டத்தில் படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை. இதையடுத்து படப் பெயரை கைவிடுவததாககமல்ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை கேம்பகோலா மைதானத்தில்படப்பிடிப்பைத் தொடங்கினார் கமல்.

இந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளார் கமல்ஹாசன். முதல் கட்டமாகவத்தலகுண்டு பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சுமார் ஒரு மாத காலத்திற்குஇந்தப் பகுதியில் காட்சிகளை சுட்டுத் தள்ளவுள்ளார் கமல்.

ஞாயிற்றுக்கிழமை கமல், அபிராமி நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டன. வத்தலகுண்டுபகுதியில் உள்ள சாலையில் இந்த காட்சி படமாக்கப்பட்டதை ஆயிரக்கணக்கானோர் கூடி நின்றுவேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்துநிறுத்தப்பட்டது.

ரசிகர்கள் கமலை நெருங்கி விடாமல், படப்பிடிப்பு குழுவினருடன் வந்துள்ள தனியார் பாதுகாப்புப்படையினர் அரண் போல நின்றனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X