கமல்-த்ரிஷாவின் 'மன்மதன் அம்பு': ஜூன் 3ல் துவக்கம்!

இந்தப்படத்தின் துவக்க விழா வரும் ஜூன் 3-ம் தேதி சென்னையில் பிரமாண்ட முறையில் நடக்கிறது. பகல் 12 மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவின் நான்காவது தளத்தில் நடக்கும் இந்த விழாவில் கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்களும், ஏராளமான திரையுலக விஐபிக்களும் பங்கேற்கிறார்கள்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் முதல் முறையாக கமல் படத்துக்கு இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையும் ரொமான்ஸும் கலந்த படமாக உருவாகும் மன்மதன் அம்பு, 90 சதவிகிதம் வெளிநாட்டிலேயே தயாராக உள்ளது. படத்தின் துவக்க விழா நிகழ்வுகதளுக்குப் பிறகு வெளிநாடு புறப்படுகிறது கமல், த்ரிஷா, ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழு.
ஸ்பெயின், மத்திய தரைக்கடல், பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஷூட்டிங் நடத்த முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











