கமல்ஹாசனின் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

சென்னை : கமலின் பிறந்த நாள் அன்று விக்ரம் திரைப்படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் கமல், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம்

விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிறந்த நாள் சர்ப்ரைஸ்

பிறந்த நாள் சர்ப்ரைஸ்

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று கமல்ஹாசனின் பிறந்த நாளான வரும் நவம்பர் 7-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் கமல் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2

இந்தியன் 2

விக்ரம் படத்துக்கு முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கமல். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின்போது லைகா நிறுவனம் ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சினை உருவானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Recommended Video

Kamal haasan ஐ தன் மகன் போல் வளர்த்தார் | Mr. Kalaivanar part-03 | Rewind Raja | Filmibeat Tamil
ராம்சரண் படத்தில் கவனம்

ராம்சரண் படத்தில் கவனம்

இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று லைகா நீதிமன்றம் சென்றது. ஆனால், அப்படி தடைவிதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியதால், ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகளை ஷங்கர் கவனித்து வருகிறார். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X