ஆக்‌ஷன் மோடில் கமல்... ஹாலிவுட் ஸ்டைலில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 ஸ்டண்ட் சீன்ஸ்!

சென்னை: கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கும் இந்த போட்டோவின் பின்னணி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 கமலின் இந்தியன் 2

கமலின் இந்தியன் 2

கமல் நடித்து வரும் இந்தியன் 2 ஷூட்டிங் திருப்பதி, ஹைதராபாத் பகுதிகளைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷெட்யூலோடு இந்தியன் 2 ஷூட்டிங் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதனிடையே சென்னை ஷெட்யூல் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 ஆக்‌ஷன் மோடில் கமல்

ஆக்‌ஷன் மோடில் கமல்

இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. அதில், ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார். மரண மாஸ்ஸான சண்டைக் காட்சியை படமாக்குவது குறித்து அவர்களுடன் கமல் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் இந்தியன் 2 படத்தில் தரமான ஆக்சன் ட்ரீட் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

 ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான இந்த புகைப்படம் கமல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவருமே இந்தியன் 2 என பிரிண்ட் செய்யப்பட்ட டிஷர்ட்டுடன் களத்தில் உள்ளனர். அதேபோல், இந்த போட்டோவின் பின்னணியில் ஒரு பாழடைந்த கட்டடம் தெரிகிறது. அதனால் இது கமலின் ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் சண்டைக் காட்சியாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 விரைவில் ரிலீஸ் அப்டேட்

விரைவில் ரிலீஸ் அப்டேட்

இந்தியன் 2 ஷூட்டிங் அசுர வேகத்தில் நடந்து கொண்டிருப்பதால், விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளை தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இன்னொரு பக்கம் ஆர்சி 15 படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாம். இதனால், இந்தியன் 2 திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே ரிலீஸ் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.

 கமல் - விவேக் சீன்ஸ்

கமல் - விவேக் சீன்ஸ்

இதனிடையே இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கியபோது அதில் விவேக்கும் கமலுடன் சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், மாரடைப்பு காரணமாக விவேக் 2021ம் ஆண்டில் உயிரிழந்ததால், அவரது காட்சிகள் இடம்பெறுமா என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டது. விவேக் மறைவு இந்தியன் 2 படக்குழுவினர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியாகவும் அமைந்தது. மேலும், விவேக்கிற்குப் பதிலாக வேறு யாரும் நடிக்கலாம் அல்லது அந்த கேரக்டரையே தூக்கிவிடலாம் என பேச்சுகள் எழுந்தன.

 படக்குழு மறுப்பு

படக்குழு மறுப்பு

ஆனால், கமல்ஹாசனும் ஷங்கரும் அந்த முடிவை கை விட்டுவிட்டதாக தெரிகிறது. விவேக் நடித்த காட்சிகளை இந்தியன் 2வில் இருந்து நீக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம். இதனால் விவேக் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

 ஏஆர் ரஹ்மானின் இசை

ஏஆர் ரஹ்மானின் இசை

ஆனால், இந்தியன் முதல் பாகத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்தியன் 2 உருவாகி வருகிறது. இதனால், முதல் பாகத்தில் இடம்பெற்ற ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசையை இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏஆர் ரஹ்மானின் அனுமதியோடு முதல் பாகத்தின் பிஜிஎம்-ஐ இந்தியன் 2-வில் பயன்படுத்துகிறாராம் அனிருத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X