கலாபவன் மணி ஓங்கிக் குத்தியதில் கமல் மூக்கில் புகுந்த ரப்பர்.. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு!

By Mayura Akilan

பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்து எண்டோஸ்கோப்பி மூலம் ரப்பரை வெளியே எடுத்த பிறகே அவர் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்' படம் தமிழில் ‘பாபநாசம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமலஹாசன், கவுதமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Kamal Hassan suffers suffocation during a fight scene in Papanasam shoot

இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்தில் கமலஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒருமாதமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் படப்பிடிப்பு

தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

ஓங்கிக் குத்திய கலாபவன் மணி

இந்தக் காட்சியில் கமல்ஹாசனும், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்தனர். பாதுகாப்புக்காக கமல்ஹாசன் மூக்கில் ரப்பர் பொருத்தப்பட்டிருந்தது. காட்சியின்போது கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார். இதனால் ரப்பர் கமல்ஹாசனின் மூக்குக்குள் போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறினார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரப்பர் அகற்றம்

பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்து ரப்பரை வெளியே எடுத்தனர்.

ஒய்வுக்கு பின்னர்

சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

டேக் எ போட்டோ

தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X