23 ஆண்டுக்கு பின் மலையாள படப்பிடிப்பில் கமல்!

பிரபல மலையாளப்பட இயக்குநர் சாஜி சுரேந்திரன் இயக்கும் படம் 'ஃபோர் பிரண்ட்ஸ்'. இதில் ஜெயராம், மீரா ஜாஸ்மின், குஞ்சக்கோ போபன் மற்றும் ஜெயசூர்யா நடிக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாஸன் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை விஜய் பார்க் ஓட்டலில் நடந்து. ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களுடன் கமல்ஹாஸனும் படப்பிடிப்பில் பங்கேற்றார். சரளமாக மலையாளம் பேசி நடித்தார்.
இதுகுறித்து இயக்குநர் சாஜி சுரேந்திரன் கூறுகையில், "கமல் ஒரு சகாப்தம். இந்திய சினிமாவின் சாதனை நடிகர். எத்தனையோ மலையாள இயக்குநர்கள் அணுகியும் இத்தனை காலம் சம்மதிக்காமல் இருந்த அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தின் சிறப்பம்சமே கமல் சார் கேரக்டர்தான்" என்றார்.
அதான் தெரியுமே... இல்லாவிட்டால் கமல் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ன!
More from Filmibeat
ஃபோர் பிரண்ட்ஸ் கமல் சாஜி சுரேந்திரன் ஜெயராம் மலையாளப் படப்பிடிப்பு four friends kamal malayalam film saji surendiran shooting


Click it and Unblock the Notifications











