»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் தனது படத்தின் புதிய பெயரை தன் பிறந்த நாளான நவம்பர் 7 ம் தேதி அறிவிக்கிறார்.

கமல் படத்தின் சண்டியர் என்ற பெயருக்கு எழுந்த எதிர்ப்புகளை அடுத்து பெயரை நீக்கப்பட்டது. இப்போதுபெயர் அறிவிக்காமலே படம் எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் நவம்பர் 7 ம் தேதி தன் 50 வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடவுள்ளார் கமல். தமிழகம்முழுவதும் இருந்தும் கமல் ரசிகர்கள் சென்னை வந்து சேர்கிறார்கள்.

அன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில், புதிய படத்தின் ஆடியோ கேசட் மற்றும்டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

அப்போது கமல் தன் படத்தின் புதிய பெயரை அறிவிக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil