உத்தம வில்லன்... துருக்கி பறந்தார் கமல் ஹாஸன்!
உத்தம வில்லன் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளது உத்தம வில்லன் குழு.
லிங்குசாமி - கமல் ஹாஸன் தயாரிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் நடந்து முடிந்தது.

துருக்கி
இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலியா செல்வதாக முதல் அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது நாட்டை மாற்றி, துருக்கி சென்றுள்ளனர். ஒரு பாடல் காட்சி மட்டும் அங்கே எடுக்கிறார்களாம். இந்தப் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

பூஜா குமார்
கமலுக்கு இதில் இரட்டை வேடங்கள். திரையுலக சூப்பர் ஸ்டாராக ஒரு வேடம். அவருக்கு ஜோடியாக பூஜா குமார், ஆன்ட்ரியா நடிக்கின்றனர். பார்வதி மேனன், ஜெயராம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாலச்சந்தர் - விஸ்வநாத்
இயக்குநர்கள் கே பாலச்சந்தரும், கே விஸ்வநாத்தும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
துருக்கி ஷெட்யூல் முடிந்து இந்தியா திரும்பியதும், மத்திய பிரதேசத்தில் பெருமளவு காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.

செப்டம்பர் 10-ல்
செப்டம்பர் 10-ம் தேதி உத்தம வில்லன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











