»   »  வேட்டையாடு விளையாடு கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் பெரும்பாலும் அமெரிக்காவிலும், கனடாவிலும்நடைபெறவுள்ளது.சமீபகாலமாக ஆளவந்தான், அன்பே சிவம் தவிர்த்து, தொடர்ந்து காமெடியான படங்களிலே நடித்துவிட்ட கமல் இதில் பக்காஆக்ஷனில் குதிக்கிறார். இதில் கமலுக்கு இரட்டை வேடமாம்.ஒரு வேடத்தில் சிபிஐ அதிகாரியாக (கஸ்டம்ஸ் அதிகாரி என்றும் சொல்லி குழப்புகிறார்கள்) நடிக்கிறார். இன்னொரு வேடம்சஸ்பென்ஸ்!.போதைக் கடத்தல்-கம்-தாதா கும்பலைத் தேடி அமெரிக்கா, கனடாவுக்குச் செல்லும்போது இந்திய அதிகாரி சந்திக்கும்சம்பங்களை அதிரடியான ஆக்ஷன் படமாகத் தரப் போகிறார் இயக்குனர் கெளதம் மேனன்.இது கமலுக்கு இன்னொரு வெற்றி விழா டைப்பிலான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட ஆக்ஷன் படத்தில் கமல்நடித்து ரொம்ப காலமாகிவிட்டது. காக்க.. காக்க படத்துக்காக சூர்யாவை ஜிம்மிலேயே குடியிருக்க வைத்த கெளதம், இதில்கமலை கொஞ்சம் உடலைக் குறைத்து ட்ரிம் ஆகச் சொல்லிவிட்டாராம்.இதனால், இப்போது உடல் வெயிட்டை குறைக்கும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார் கமல்.படத்தைத் தயாரிக்கும் ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மொய்தீனுக்கு முதல் பிரதி அடிப்படையில் படத்தை உருவாக்கித் தரப்போகிறார் கமல். அதாவது படத்தை எடுத்துத் தருவது வரை கமலின் பொறுப்பு. தயாரிப்பாளர் பணத்தைத் தருவதோடு ஒதுங்கிநின்றுவிடுவார்.இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் இம் மாத இறுதியில் கமல்-கெளதம்-ஜோதிகா ஆகியோர்அடங்கிய பெரிய டீம் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. 40 நாட்கள் அங்கேயே சுற்றி யுஎஸ்சின் பல நகரங்களிலும் படத்தை சூட்செய்ய இருக்கிறார்கள்.கமலுடன் ஜோதிகா நடிக்கும் இரண்டாவது படம் இது. கெளதமின் படத்தில் ஜோதிகா நடிப்பதும் இது இரண்டாவது முறையே.படத்தில் ஜோதிகா தவிர்த்து இன்னொரு புதுமுகமும் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். பலரையும் ஸ்கிரீன் டெஸ்ட்பார்த்துவிட்டனர். நாயகியை இறுதி செய்யும் வேலை நடக்கிறது.படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேமராவைக் கையாளப் போவது ஜீவா. இந்தியன் படத்தின் கேமராமேனானஜீவா ஒரு இயக்குனரும் கூட (12 பி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கையை சுட்டவர்) என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே.வழக்கமாக கெளதமின் படங்களில் ஆர்.டி.ராஜசேகர் தான் (காக்க.. காக்கவில் கலக்கியவர்) ஒளிப்பதிவை கவனிப்பார்.தெலுங்கில் காக்க.. காக்கவை கெளதம் எடுத்தபோதும் ராஜசேகர் தான் ஒளிப்பதிவை செய்தார்.ஆனால், கமலுக்கு ரொம்ப தோதானவர் என்பதாலும் ராஜசேகர் மற்ற ப்ராஜக்ட்களில் பிஸி என்பதாலும் ஜீவாவைத் தேர்வுசெய்துவிட்டனராம்.கமல் குறித்த இன்னொரு விஷயம். தனது அலுவகத்தில் சமீபத்தில் டிஜிட்டல் மினி தியேட்டரை உருவாக்கியிருக்கிறார் கமல்.இதில் தான் லேட்டஸ்ட் ஹாலிவுட் படங்களைப் பார்க்கிறாராம். வேட்டையாடு.. விளையாடுக்காக சில ஹாலிவுட் படங்களைமீண்டும் மீண்டும் பார்த்தாராம் கமல்.

வேட்டையாடு விளையாடு கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் பெரும்பாலும் அமெரிக்காவிலும், கனடாவிலும்நடைபெறவுள்ளது.சமீபகாலமாக ஆளவந்தான், அன்பே சிவம் தவிர்த்து, தொடர்ந்து காமெடியான படங்களிலே நடித்துவிட்ட கமல் இதில் பக்காஆக்ஷனில் குதிக்கிறார். இதில் கமலுக்கு இரட்டை வேடமாம்.ஒரு வேடத்தில் சிபிஐ அதிகாரியாக (கஸ்டம்ஸ் அதிகாரி என்றும் சொல்லி குழப்புகிறார்கள்) நடிக்கிறார். இன்னொரு வேடம்சஸ்பென்ஸ்!.போதைக் கடத்தல்-கம்-தாதா கும்பலைத் தேடி அமெரிக்கா, கனடாவுக்குச் செல்லும்போது இந்திய அதிகாரி சந்திக்கும்சம்பங்களை அதிரடியான ஆக்ஷன் படமாகத் தரப் போகிறார் இயக்குனர் கெளதம் மேனன்.இது கமலுக்கு இன்னொரு வெற்றி விழா டைப்பிலான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட ஆக்ஷன் படத்தில் கமல்நடித்து ரொம்ப காலமாகிவிட்டது. காக்க.. காக்க படத்துக்காக சூர்யாவை ஜிம்மிலேயே குடியிருக்க வைத்த கெளதம், இதில்கமலை கொஞ்சம் உடலைக் குறைத்து ட்ரிம் ஆகச் சொல்லிவிட்டாராம்.இதனால், இப்போது உடல் வெயிட்டை குறைக்கும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார் கமல்.படத்தைத் தயாரிக்கும் ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மொய்தீனுக்கு முதல் பிரதி அடிப்படையில் படத்தை உருவாக்கித் தரப்போகிறார் கமல். அதாவது படத்தை எடுத்துத் தருவது வரை கமலின் பொறுப்பு. தயாரிப்பாளர் பணத்தைத் தருவதோடு ஒதுங்கிநின்றுவிடுவார்.இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் இம் மாத இறுதியில் கமல்-கெளதம்-ஜோதிகா ஆகியோர்அடங்கிய பெரிய டீம் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. 40 நாட்கள் அங்கேயே சுற்றி யுஎஸ்சின் பல நகரங்களிலும் படத்தை சூட்செய்ய இருக்கிறார்கள்.கமலுடன் ஜோதிகா நடிக்கும் இரண்டாவது படம் இது. கெளதமின் படத்தில் ஜோதிகா நடிப்பதும் இது இரண்டாவது முறையே.படத்தில் ஜோதிகா தவிர்த்து இன்னொரு புதுமுகமும் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். பலரையும் ஸ்கிரீன் டெஸ்ட்பார்த்துவிட்டனர். நாயகியை இறுதி செய்யும் வேலை நடக்கிறது.படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேமராவைக் கையாளப் போவது ஜீவா. இந்தியன் படத்தின் கேமராமேனானஜீவா ஒரு இயக்குனரும் கூட (12 பி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கையை சுட்டவர்) என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே.வழக்கமாக கெளதமின் படங்களில் ஆர்.டி.ராஜசேகர் தான் (காக்க.. காக்கவில் கலக்கியவர்) ஒளிப்பதிவை கவனிப்பார்.தெலுங்கில் காக்க.. காக்கவை கெளதம் எடுத்தபோதும் ராஜசேகர் தான் ஒளிப்பதிவை செய்தார்.ஆனால், கமலுக்கு ரொம்ப தோதானவர் என்பதாலும் ராஜசேகர் மற்ற ப்ராஜக்ட்களில் பிஸி என்பதாலும் ஜீவாவைத் தேர்வுசெய்துவிட்டனராம்.கமல் குறித்த இன்னொரு விஷயம். தனது அலுவகத்தில் சமீபத்தில் டிஜிட்டல் மினி தியேட்டரை உருவாக்கியிருக்கிறார் கமல்.இதில் தான் லேட்டஸ்ட் ஹாலிவுட் படங்களைப் பார்க்கிறாராம். வேட்டையாடு.. விளையாடுக்காக சில ஹாலிவுட் படங்களைமீண்டும் மீண்டும் பார்த்தாராம் கமல்.

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் பெரும்பாலும் அமெரிக்காவிலும், கனடாவிலும்நடைபெறவுள்ளது.

சமீபகாலமாக ஆளவந்தான், அன்பே சிவம் தவிர்த்து, தொடர்ந்து காமெடியான படங்களிலே நடித்துவிட்ட கமல் இதில் பக்காஆக்ஷனில் குதிக்கிறார். இதில் கமலுக்கு இரட்டை வேடமாம்.

ஒரு வேடத்தில் சிபிஐ அதிகாரியாக (கஸ்டம்ஸ் அதிகாரி என்றும் சொல்லி குழப்புகிறார்கள்) நடிக்கிறார். இன்னொரு வேடம்சஸ்பென்ஸ்!.


போதைக் கடத்தல்-கம்-தாதா கும்பலைத் தேடி அமெரிக்கா, கனடாவுக்குச் செல்லும்போது இந்திய அதிகாரி சந்திக்கும்சம்பங்களை அதிரடியான ஆக்ஷன் படமாகத் தரப் போகிறார் இயக்குனர் கெளதம் மேனன்.

இது கமலுக்கு இன்னொரு வெற்றி விழா டைப்பிலான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட ஆக்ஷன் படத்தில் கமல்நடித்து ரொம்ப காலமாகிவிட்டது. காக்க.. காக்க படத்துக்காக சூர்யாவை ஜிம்மிலேயே குடியிருக்க வைத்த கெளதம், இதில்கமலை கொஞ்சம் உடலைக் குறைத்து ட்ரிம் ஆகச் சொல்லிவிட்டாராம்.

இதனால், இப்போது உடல் வெயிட்டை குறைக்கும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார் கமல்.

படத்தைத் தயாரிக்கும் ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மொய்தீனுக்கு முதல் பிரதி அடிப்படையில் படத்தை உருவாக்கித் தரப்போகிறார் கமல். அதாவது படத்தை எடுத்துத் தருவது வரை கமலின் பொறுப்பு. தயாரிப்பாளர் பணத்தைத் தருவதோடு ஒதுங்கிநின்றுவிடுவார்.


இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் இம் மாத இறுதியில் கமல்-கெளதம்-ஜோதிகா ஆகியோர்அடங்கிய பெரிய டீம் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. 40 நாட்கள் அங்கேயே சுற்றி யுஎஸ்சின் பல நகரங்களிலும் படத்தை சூட்செய்ய இருக்கிறார்கள்.

கமலுடன் ஜோதிகா நடிக்கும் இரண்டாவது படம் இது. கெளதமின் படத்தில் ஜோதிகா நடிப்பதும் இது இரண்டாவது முறையே.

படத்தில் ஜோதிகா தவிர்த்து இன்னொரு புதுமுகமும் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். பலரையும் ஸ்கிரீன் டெஸ்ட்பார்த்துவிட்டனர். நாயகியை இறுதி செய்யும் வேலை நடக்கிறது.

படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேமராவைக் கையாளப் போவது ஜீவா. இந்தியன் படத்தின் கேமராமேனானஜீவா ஒரு இயக்குனரும் கூட (12 பி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கையை சுட்டவர்) என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே.


வழக்கமாக கெளதமின் படங்களில் ஆர்.டி.ராஜசேகர் தான் (காக்க.. காக்கவில் கலக்கியவர்) ஒளிப்பதிவை கவனிப்பார்.தெலுங்கில் காக்க.. காக்கவை கெளதம் எடுத்தபோதும் ராஜசேகர் தான் ஒளிப்பதிவை செய்தார்.

ஆனால், கமலுக்கு ரொம்ப தோதானவர் என்பதாலும் ராஜசேகர் மற்ற ப்ராஜக்ட்களில் பிஸி என்பதாலும் ஜீவாவைத் தேர்வுசெய்துவிட்டனராம்.

கமல் குறித்த இன்னொரு விஷயம். தனது அலுவகத்தில் சமீபத்தில் டிஜிட்டல் மினி தியேட்டரை உருவாக்கியிருக்கிறார் கமல்.இதில் தான் லேட்டஸ்ட் ஹாலிவுட் படங்களைப் பார்க்கிறாராம். வேட்டையாடு.. விளையாடுக்காக சில ஹாலிவுட் படங்களைமீண்டும் மீண்டும் பார்த்தாராம் கமல்.


Read more about: kamals vettaiyadu vilaiyadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil