ஜோதிகாவை வேட்டையாடும் கமல் மும்பை எக்ஸ்பிரஸைத் தொடர்ந்து காக்க..காக்க.. கெளதம் மேனனின் இயக்கத்தில் கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடுஎன்ற படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய்காந்த், சூர்யா, ஜோதிகாஆகியோரும் கலந்து கொண்டனர்.இதற்கிடையே மும்பை எக்ஸ்பிரஸ் தலைப்புக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தபடி போராட்டத்தைத்தொடங்கியுள்ளனர். சிதம்பரத்தில் லேனா திரையரங்கில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.வேட்டையாடு விளையாடு தொடக்க விழாவில் விஜய்காந்துடன் கமல்இந் நிலையில் அந்த தியேட்டருக்குச் சென்ற வி.சிறுத்தைகள் அமைப்பின் செயலாளர் காவியச் செல்வன் தலைமையிலானதொண்டர்கள் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என தியேட்டர் உரிமையாளரை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.மேலும் தமிழகம் முழுவதுமே இதுபோல தியேட்டர்களுக்கு நேரடியாகவே மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.இந்தப் படத்திற்கு கட்டப்பட்ட பேனர்களும் பல இடங்களில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளன.வரும் 14ம் தேதி படம் ரீலீஸ் ஆக உள்ள நிலையில் இந்தத் தகவல்களால் கமல் டென்சனில் உள்ளார். இந்த பரபரப்புக்கு இடையேதனது அடுத்த படத்தின் தொடக்க விழாவை இன்று கமல் நடத்தினார்.அவரது வழக்கப்படி பூஜை, புனஸ்காரம் எல்லாம் இல்லாமல் குத்துவிளக்கு மட்டும் ஏற்றி பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் புதியபடத்தின் தொடக்க விழா நடந்தது. விஜய்காந்த் குத்து விளக்கேற்றி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கமல் பேசுகையில்,இங்கு நான் ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தின் பேசினேன். நாடு ஒற்றுமையாக இருக்க கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசவேண்டியுள்ளது. எங்களுக்கு தமிழ் ஆர்வம் இல்லை என யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். அதற்கு உதாரணம் தான் இந்தடைட்டில்.. வேட்டையாடு விளையாடு.எங்களுக்கு தமிழ் ஆர்வம் மட்டுமல்ல, மோகமும் உண்டு. அதை எங்கள் இஷ்டத்துக்கு விட்டுவிடுங்கள்.கிழிக்கப்பட்ட பேனர்கள்கலாட்டா கல்யாணம் என்ற படம் வந்தது. அதில் கலாட்டா இந்தி வார்த்தை தான். சில நேரங்களில் அது போன்ற வார்த்தைகளைதவிர்க்க முடியாததாகி விடுகிறது.கலைஞர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள், எங்களை ஊனப்படுத்தாதீர்கள். சினிமாவில் பல பிரச்சனைகள். அதையெல்லாம்தாண்டித்தான் படம் எடுக்கிறோம். நகைச்சுவைக்காகத் தான் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை எடுத்தேன். அதுக்கும் பிரச்சனை வரவேண்டும் என்றால் வரத் தான் செய்யும். அதையெல்லாம் வென்று தான் சினிமாவை கொண்டு வர வேண்டும்.பட பூஜைகளில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. தொடக்க விழா எதற்கு, நேரடியாக வேலையை ஆரம்பிக்கலாம் என்நினைப்பவன் நான். ஆனால், இத்தகு விழாக்கள் நாம் ஒரு குடும்பமாக இருக்கிறோம் என்பதை உணர்த்த உதவுகின்றன.இல்லாவிட்டால் நாமெல்லாம் தனித்தனியாக இருப்பதாக நினைத்து ஆளாளுக்கு மிரட்டுவார்கள்.இந்தப் படத்தில் என்னுடன் மீண்டும் ஜோதிகா ஜோடி சேருகிறார். அவர் முன்பை விட அழகாக இருக்கிறார் என்றார் கமல்.ஜோவின் அழகு குறித்து கமல் பேசியபோது, சூர்யாவின் முகத்தில் தனி உற்சாகம்.கமல்ஹாசனின் படத் தொடக்க விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் சூர்யா வந்தது, ஜோவுக்கும் அவருக்கும் இடையிலானலவ்ஸை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் அதை ஒத்துக்கவா போறாங்க...கமலுக்கு ஜோடியாக ஜோதிகா முதலில் தெனாலி படத்தில் நடித்தார். இது இருவரும் கூட்டு சேரும் இரண்டாவது படமாகும்.

By Staff

மும்பை எக்ஸ்பிரஸைத் தொடர்ந்து காக்க..காக்க.. கெளதம் மேனனின் இயக்கத்தில் கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடுஎன்ற படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய்காந்த், சூர்யா, ஜோதிகாஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே மும்பை எக்ஸ்பிரஸ் தலைப்புக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தபடி போராட்டத்தைத்தொடங்கியுள்ளனர். சிதம்பரத்தில் லேனா திரையரங்கில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.


வேட்டையாடு விளையாடு தொடக்க விழாவில் விஜய்காந்துடன் கமல்

இந் நிலையில் அந்த தியேட்டருக்குச் சென்ற வி.சிறுத்தைகள் அமைப்பின் செயலாளர் காவியச் செல்வன் தலைமையிலானதொண்டர்கள் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என தியேட்டர் உரிமையாளரை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதுமே இதுபோல தியேட்டர்களுக்கு நேரடியாகவே மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்தப் படத்திற்கு கட்டப்பட்ட பேனர்களும் பல இடங்களில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளன.

வரும் 14ம் தேதி படம் ரீலீஸ் ஆக உள்ள நிலையில் இந்தத் தகவல்களால் கமல் டென்சனில் உள்ளார். இந்த பரபரப்புக்கு இடையேதனது அடுத்த படத்தின் தொடக்க விழாவை இன்று கமல் நடத்தினார்.

அவரது வழக்கப்படி பூஜை, புனஸ்காரம் எல்லாம் இல்லாமல் குத்துவிளக்கு மட்டும் ஏற்றி பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் புதியபடத்தின் தொடக்க விழா நடந்தது. விஜய்காந்த் குத்து விளக்கேற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கமல் பேசுகையில்,

இங்கு நான் ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தின் பேசினேன். நாடு ஒற்றுமையாக இருக்க கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசவேண்டியுள்ளது. எங்களுக்கு தமிழ் ஆர்வம் இல்லை என யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். அதற்கு உதாரணம் தான் இந்தடைட்டில்.. வேட்டையாடு விளையாடு.

எங்களுக்கு தமிழ் ஆர்வம் மட்டுமல்ல, மோகமும் உண்டு. அதை எங்கள் இஷ்டத்துக்கு விட்டுவிடுங்கள்.


கிழிக்கப்பட்ட பேனர்கள்

கலாட்டா கல்யாணம் என்ற படம் வந்தது. அதில் கலாட்டா இந்தி வார்த்தை தான். சில நேரங்களில் அது போன்ற வார்த்தைகளைதவிர்க்க முடியாததாகி விடுகிறது.

கலைஞர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள், எங்களை ஊனப்படுத்தாதீர்கள். சினிமாவில் பல பிரச்சனைகள். அதையெல்லாம்தாண்டித்தான் படம் எடுக்கிறோம். நகைச்சுவைக்காகத் தான் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை எடுத்தேன். அதுக்கும் பிரச்சனை வரவேண்டும் என்றால் வரத் தான் செய்யும். அதையெல்லாம் வென்று தான் சினிமாவை கொண்டு வர வேண்டும்.

பட பூஜைகளில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. தொடக்க விழா எதற்கு, நேரடியாக வேலையை ஆரம்பிக்கலாம் என்நினைப்பவன் நான். ஆனால், இத்தகு விழாக்கள் நாம் ஒரு குடும்பமாக இருக்கிறோம் என்பதை உணர்த்த உதவுகின்றன.இல்லாவிட்டால் நாமெல்லாம் தனித்தனியாக இருப்பதாக நினைத்து ஆளாளுக்கு மிரட்டுவார்கள்.


இந்தப் படத்தில் என்னுடன் மீண்டும் ஜோதிகா ஜோடி சேருகிறார். அவர் முன்பை விட அழகாக இருக்கிறார் என்றார் கமல்.

ஜோவின் அழகு குறித்து கமல் பேசியபோது, சூர்யாவின் முகத்தில் தனி உற்சாகம்.

கமல்ஹாசனின் படத் தொடக்க விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் சூர்யா வந்தது, ஜோவுக்கும் அவருக்கும் இடையிலானலவ்ஸை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் அதை ஒத்துக்கவா போறாங்க...

கமலுக்கு ஜோடியாக ஜோதிகா முதலில் தெனாலி படத்தில் நடித்தார். இது இருவரும் கூட்டு சேரும் இரண்டாவது படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X