»   »  அஜீத் அம்மாவாக கனிகா !!!

அஜீத் அம்மாவாக கனிகா !!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள காட் பாதர் படத்தில் அஜீத்தின் அம்மாவாக கனிகா நடிக்கிறார்.

ஜக்குபாயை பழைய பாயில் கட்டி கடலில் தூக்கிப் போட்ட ரவிக்குமார் தனது அடுத்த படமான காட் பாதரை மிக பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.மகா பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை பேசி இழுத்து வந்துவிட்டார் இசையமைக்க.

கிட்டத்தட்ட இங்கிலாந்துவாசியாகிவிட்ட ரஹ்மான், அங்கு நாடகத்துக்கு இசையமைக்க பவுண்டுகளில் ரூ. 20 கோடி வரை ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.முதலில் தனது பிஸி ஷெட்யூலைச் சொல்லி காட்பாதருக்கு இசையமைக்க மறுத்த ரஹ்மானிடம் அஜீத்தும் ரவிக்குமாரும் பேசி கரைத்துவிட்டனர்.

இந்தப் படத்தில் 3 கேரக்டர்களில் அஜீத் நடிக்கிறார். ஒன்று அப்பா கேரக்டர், இன்னொன்று வில்லன் கேரக்டர். ஹீரோவாக ஒரு ரோல்.

இதில் ஹீரோ ரோல் அஜீத்துக்கு ஆசின் ஜோடி. வில்லன் அஜீத்துக்கு ஜோடியே இல்லையாம். இதனால் பிரச்சனை இல்லை.

ஆனால், அப்பாவாக நடிக்கும் அஜீத்துக்குத் தான் யாரை ஜோடியாகப் போடுவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஓல்டு அஜீத்துக்கு ஜோடியாகவும், மகன் அஜீத்துக்குஅம்மாவாகவும் நடிக்க, ரவிக்குமாருக்கு நெருக்கமானவராக இருந்த மீனாவைப் போடலாம் என்று முதலில் யோசிக்கப்பட்டு அது கைவிடப்பட்டுவிட்டது.

இதையடுத்து நதியாவைக் கேட்டுப் பார்த்தார்கள். சன் ஆப் மகாலட்சுமிக்குப் பின் மீண்டும் லண்டனுக்கே போய்விட்ட நதியா மீண்டும் நடிக்க ரெடி தான் என்றாலும்,அப்பா அஜீத்துக்கு ஜோடி என்றதும் யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டாராம்.

இவர் ஒரு படத்திற்கு ரூ. 20 லட்சம் வரை கேட்பது தனிக்கதை. கேட்பதைத் தருகிறோம் என்று சொன்னாலும் ரொம்பவே யோசிக்கிறாராம். ஜெயம் ரவிக்கு அம்மாவாகநடித்தாலும் அதில் தனது வயதைக் கூட்டிக் காட்டக் கூடாது என்ற கண்டிசனுடன் தான் நடித்தார்.

ஆனால், காட்பாதரில் அஜீத்துக்கு மிகவும் ஓல்ட் கெட்-அப்பாம். அதைப் போலவே அவருக்கு ஜோடியாக நடிப்பவரையும் வயதை அதிகரித்துக் காட்டவுள்ளார்களாம்.

இந்தியன் படத்தில் கமல் தாத்தாவுக்கு ஜோடியாக நடித்த சுகன்யாவை குடுகுடு பாட்டியாக்கியது மாதிரி தனக்கும் மகா ஓல்டு வேஷம் போட்டுவிடுவார்கள் என்றுபயந்து போன நதியா, அந்த கேரக்டரில் நடிக்க ரொம்பவே யோசிக்கிறாராம்.

நதியாவிடம் இருந்து பதில் வராததால் இனியும் காத்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு ரவிக்குமாரும் அஜீத்தும் வந்துவிட்டனர்.

இதையடுத்து பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, டான்ஸர் வரை ஹீரோயினாக நடித்து, ஆட்டோகிராப்பில் கடைசி காட்சியில் வந்து சேரனைக்கைப்பிடிக்கும் பெண்ணாக நடித்த கனிகாவைக் கேட்டுள்ளார்கள்.

இப்போது பட வாய்ப்பே இல்லாமல், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக மாறிவிட்ட கனிகா இந்த ஓல்டு ரோலை உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டாராம்.

கனிகா நிலைமை இப்படி ஆகிப் போச்சே!!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil