கோட்டி கோபா 3 சூட்டிங்கில் விபத்து... கிச்சா சுதீப்புக்கு முதுகில் காயம்

By R VINOTH

சென்னை: கோட்டி கோபா 3 படத்தில் நடிக்கும் போது கன்னட நடிகர் கிச்சா சுதீப் விபத்தில் சிக்கினார். சண்டைக்காட்சி படமாக்கப்படும் போது சுதீப்புக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயத்தால் துடித்த அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயத்தின் காரணமாக நடிகர் சுதீப்பை சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

Kannada Actor Sudeep met an accident in Shooting place

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் தான் கன்னட நடிகர் சுதீப். இவர் சாண்டல்வுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் புலி, முடிஞ்சா இவன புடி, போன்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஹிந்தியில் தயாராகும் தபாங் 3 என்ற படத்தில் சுதீப் நடித்து வந்தார். இதில் அவர் நடிக்க வேண்டிய பல காட்சிகள் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து தற்போது கன்னடத்தில் தயாராகும் கோட்டிகோபா-3 என்ற படத்தில் நடிக்க சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜிராவ் திரைப்பட நகரில் இதற்கான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சண்டை காட்சி ஒன்று படமாக்கப்படும் போது எதிர் பாராத விதமாக திடீர் விபத்து ஏற்பட்டது சுதீப் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதுகில் ஏற்பட்டுள்ள பலத்த காயம் காரணமாக அவர் கண்டிப்பாக சில வாரங்கள் ரெஸ்ட் வேண்டும் என்று டாக்டர்கள் கூறிய படப்பிடிப்பு ரத்து செய்யபட்டுள்ளது. சூட்டிங்கில் பிசியாக இருந்த கிச்சா சுதீப் இப்போ ரெஸ்ட்டில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X