ஷூட்டிங் ஸ்டார்ட்.. 4 மாதத்துக்கு பின் மேக்கப் போட்ட பிரபல ஹீரோ.. அற்புதமாக உணர்ந்ததாக நெகிழ்ச்சி!

By

ஐதராபாத்: நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு தனது படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறார் பிரபல ஹீரோ.

பிரபல கன்னட நடிகர் சுதீப். தமிழில், நான் ஈ, சிம்புதேவன் இயக்கிய புலி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.

ஸ்ரத்தா தாஸ்

ஸ்ரத்தா தாஸ்

இந்தியில் சல்மான் கானின், தபாங் 3 படத்தில் இவர் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. அடுத்து கோட்டிகோப்பா 3 என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இதில் மடோனா செபஸ்டின், ஸ்ரத்தா தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சிவகார்த்திக் இயக்கும் இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது.

கடுமையான பயிற்சி

கடுமையான பயிற்சி

இதையடுத்து சுதீப் இப்போது, கன்னடத்தில் உருவாகும் பான்டோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக உடலை இறுக்கி, முறுக்கி வைத்திருக்கிறார். படத்தில் சிக்ஸ்பேக்கில் வருகிறார் அவர். இதற்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த ஒர்க் அவுட் புகைப்படங்கள் வைரலாயின.

4 மாத இடைவெளி

4 மாத இடைவெளி

இதன் ஷூட்டிங்கும் கொரோனா லாக்டவுனால் தடைபட்டிருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பை தொடங்க சில மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இருந்தும் பெரிய படங்கள் எதுவும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்நிலையில் நடிகர் சுதீப், நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 'பான்டோம்' படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார்.

அற்புதமாக உணர்ந்தேன்

அற்புதமாக உணர்ந்தேன்

அங்குள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. துபற்றி அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சுதீப், நீண்ட இடைவெளிக்குப் பின் என் முகத்தில் மேக்கப் போட்டதும் அற்புதமாக உணர்ந்தேன். என் passion -ல் இருந்து கொஞ்சம் விலகி நீண்ட விடுமுறையில் இருந்ததுபோல் உணர்ந்தேன். அந்த passion-க்கு சினிமா என்று பெயர். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: sudeep phantom சுதீப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X