»   »  லஜ்ஜோ மணி ரத்னம்

லஜ்ஜோ மணி ரத்னம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலக அழகி ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கை வைத்து குருவைப் படைத்த மணிரத்தினம் அடுத்தும் ஒரு இந்திப் படத்தைஇயக்கப் போகிறார். இதில் அவரது நாயகி கட்டழகி கரீனா கபூர். நாயகன் அமீர்கான்.

மணிரத்தினம் அடுத்து எப்போது தமிழ்ப் படத்தை இயக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வந்த நிலையில் குருவைஆரம்பித்தார் மணி. இதனால் அவரது தமிழ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதை உணர்ந்த மணி, குருவின் டப்பிங்கை வெளியிட்டு ஏமாற்றத்தை ஓரளவு சரி செய்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே(இது அம்பானி குடும்பத்துக் கதை என்ற பிரச்சனை எழுந்தது) வெளியாகியுள்ள குருவைத் தொடர்ந்து அடுத்த படத்திற்குத்தயாராகி விட்டார் மணி.

இதுவும் இந்திப் படம்தான். லஜ்ஜோ என பெயர் இட்டுள்ளார் மணி. இதில் நாயகியாக நடிக்கப் போவது கரீனா கபூர்.அமீர்கான்தான் நாயகன். படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் பாலைவனம்.

அமர்க்கள நாயகன் அமீர்கானுடன் மணி இணையும் முதல் படம் இது என்பதால் பாலிவுட்டில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறஆரம்பித்துள்ளது.

படம் குறித்து இந்தளவுக்குத்தான் தகவல்கள் கசிந்துள்ளன. மாபெரும் இசை விருந்தாக இந்தப் படத்தை உருவாக்கப்போகிறாராம் மணி. வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான்தான் இப்படத்துக்கும் இசை.

இசைதான் இப்படத்தின் முக்கிய கரு என்பதால் படு வித்தியாசமான இசையுடன் தயாராகுமாறு ரஹ்மானைக் கேட்டுக்கொண்டுள்ளாராம் மணி. ரஹ்மானும் ரகளையாக ரெடி செய்ய ஆரம்பித்துள்ளாராம்.

பாலைவனப் பின்னணி என்பதால் முழுக்க முழுக்க பாலைவனத்திலேயே .க்கால்வாசிப் படத்தை எடுக்கப் போகிறார் மணி.ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன் பாலைவனம் பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியாது என்பதால் அதற்குப் பிறகு ஷூட்டிங்கைஆரம்பித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் மணி.

இந்தப் படத்திற்கு பக்கவாட்டிலேயே ஒரு சின்ன சயின்ஸ் பிக்ஷன் படம் இயக்கும் திட்டமும் மணியிடம் உள்ளதாம்.அதேபோல குழந்தைகளை வைத்து இன்னொரு சூப்பர் படத்தையும் எடுக்கும் திட்டம் உள்ளதாம் மணியிடம்.

ஹை, இன்னொரு அஞ்சலி வரப் போறா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil