பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில்... குதிரையில் இருந்து விழுந்தார்... நடிகர் கார்த்தி காயம்

By

சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

பாகுபலி போல இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

போலி திருமணச் சான்றிதழ்... பணம் பறிக்கும் மோசடி.. என்ன சொல்கிறாள் திரெளபதி?

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத்தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம்ரவியின் ஓபனிங் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டன. இதில் சுமார் 100 குதிரைகள் பங்கேற்றன.

பிலிம்சிட்டி

பிலிம்சிட்டி

இதையடுத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்துவருகிறது. இங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக, ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கான், நடிகை ஷோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் இணைந்தனர்.

கார்த்தி காயம்

கார்த்தி காயம்

இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தில் ஏராளமான குதிரைகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக நடிகர், நடிகைகள் பயிற்சிப் பெற்றுள்ளனர். வாள் சண்டைகளும் படத்தில் இருக்கிறது. இந்நிலையில் குதிரை சவாரியின் போது நடிகர் கார்த்தி தூக்கி வீசப்பட்டதாகவும் அவருக்கு லேசான காயம் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X