»   »  பாய்ந்த பாம்பு, மயங்கிய கீர்த்தி!

பாய்ந்த பாம்பு, மயங்கிய கீர்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த சூர்யா படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை கீர்த்தி சாவ்லா மீது திடீரென வீசப்பட்டபாம்பைப் பார்த்து அவர் பயந்து அலறி மயங்கி விழுந்தார்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் சிரஞ்சீவி நடிகராக அறிமுகமாகும் படம் சூர்யா. இப்படத்தைதங்கம்தான் இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சாவ்லா.

மயிலாப்பூர் கோகுலம் ஹவுஸில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. காட்சிப்படி, கீர்த்தி சாவ்லாவைப்பயமுறுத்துவதற்காக ஹீரோ சிரஞ்சீவி பாம்பைத் தூக்கி எறிய வேண்டும். இந்தக் காட்சியை தத்ரூபமாக படமாக்கநினைத்த ஜாகுவார் தங்கம், பாம்பு மேட்டர் குறித்து கீர்த்தியிடம் முன்கூட்டியே சொல்லவில்லை.

திடீரென பாம்பை வீசினால், நிஜமாகவே அவர் பயப்படுவார், அது தத்ரூபமாக அமையும் என்பதால் பாம்புவீசப்போவதை அவர் சொல்லாமல் விட்டு விட்டார். மேலும் நிஜப் பாம்பையும், டிரெய்னிங் கொடுப்பதற்காகபாம்பாட்டியையும் வரவழைத்திருந்தார்.

பாம்பாட்டி, பாம்பை வைத்து சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்தார். பின்னர் காட்சிக்கு அனைவரும் தயாரானார்கள்.ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என தங்கம் சொன்னதும், பாம்பைத் தூக்கி கீர்த்தி சாவ்லா மீது வீசினார் சிரஞ்சீவி.

திடீரென தன் மீது பாம்பு வந்து விழுவதைப் பார்த்த கீர்த்தி சாவ்லா பயந்து போய் விட்டார். பாம்பு பாம்பு எனஅலறிய அவர் அப்படியே மயக்கமாகி விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு கீர்த்தி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி ஆசுவாசப்படுத்தினார்கள்.மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரும் கூட பீதியிலிருந்து மீளவில்லை கீர்த்தி சாவ்லா. இதனால் படப்பிடிப்பைதற்காலிகமாக ஒத்திவைத்தார்கள்.

இதுகுறித்து கீர்த்தி சாவ்லா கூறுகையில், இதெல்லாம் எல்லை மீறிய செயல். பாம்பு வீசப்படும் என என்னிடம்சொல்லவே இல்லை. எதிர்பாராத நேரத்தில் பாம்பைத் தூக்கி வீசி விட்டார்கள்.

திடீரென பாம்பு மேலே வந்து விழுவதைப் பார்த்ததும் நான் பயந்து, ஆடிப் போய் விட்டேன். மூச்சே நின்றுவிட்டது போல ஆகி விட்டது. ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? இந்த சம்பவத்தை என்னால்மறக்கவே முடியாது என்றார் படபடப்புடன்.

அழகியை இப்படியா அழச் செய்வது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil