இப்போதான் ஃபர்ஸ்ட் லுக் விட்டாங்க.. அதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சிடுச்சா?

நடிகை கீர்த்தி சுரேஷின் 24வது படமான பென்குயின் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படக்குழுவினருடன் கீர்த்தி எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Keerthy Suresh Penguine Movie Poster released

சென்னை: சர்க்கார் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதிதாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

பாலிவுட், டோலிவுட் என பிசியாகியுள்ள கீர்த்தி சுரேஷ், சத்தமே காட்டாமல் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பெண்குயின் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய விருது

தேசிய விருது

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகையர் திலகம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகையர் திலகம் படத்திற்காக பல மேடைகளில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

6 படங்கள்

6 படங்கள்

தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2, சண்டக்கோழி 2, சீமராஜா மற்றும் சர்கார் என கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மட்டும் 6 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. இதுதவிர தெலுங்கில் அஞ்ஞாதவாசி படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதுவரை அவர் நடிப்பில் ஒரு படமும் வெளியாகவில்லை.

கர்ப்பம்

கர்ப்பம்

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பெண்குயின் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கீர்த்தி சுரேஷ் ஷில்லவுட்டில் கர்ப்பவதியாக போஸ் கொடுத்திருந்தார்.

அதுக்குள்ள

அதுக்குள்ள

மேயாத மான், மெர்க்குரி படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பெண்குயின். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் 17ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங் ஓவர் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு தொடக்கத்திலே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X