»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

டி.ராஜேந்தர் வழக்கமாக தான் தயாரிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பார். அவர் எடுத்த பல தங்கச்சிசென்டிமென்ட் படங்களில் வரும் கொட்டாங்குச்சி பாடல்கள் ஓரளவு கேட்பது மாதிரி இருந்தன.

சில சமயங்களில் ராகத்திற்கும் அவருக்கும் மல்லுக்கட்டே நடக்கும். தரனானே, தரனானே என்று இழு இழுன்னுஇழுத்து இசையை வெலுத்துக் கட்டிவிடுவார். ஆனால் இப்போது வந்துள்ள சிக்குபல்ல,, சிக்குபல்ல,, ராகங்கள்ரசிகர்களை நடுநடுங்க வைக்கின்றன.

இவர் அவ்வப்போது சில வெளியார் படங்களுக்கும் இசையமைப்பார். ஆனால் சமீப காலமாக அவர் எந்தவெளியார் படங்களுக்கும் இசையமைக்கவில்லை.

இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்டர் கேயார் தயாரித்து இயக்கும் வித்தியாசமான பெயர்கொண்ட படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பெயர் எதுவும் சூட்டப்படவில்லை.என்ன பெயர் வைக்கலாம்? என்பதையே படத்தின் டைட்டிலாக இப்போதைக்கு வைத்துள்ளனர். படம் ரிலீஸாகிசில வாரங்களுக்குப் பின் ரசிகர்கள் பரிந்துரைக்கும் பெயர் பின்னர் படத்தின் டைட்டிலாக சூட்டப்படும்.

இந்த வித்தியாசமான படத்தில் கார்த்திக்கும், முரளியும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வுஇன்னும் முடியவில்லை. பிரபல நாயகி நடிப்பார் என்று தெரிகிறது. வைகைப் புயல் வடிவேலு, கோவைத்தங்கம், மணிவண்ணன் ஆகியோர் காமடியில் கலக்கவிருக்கிறார்கள்.

படத்தை கேயார் இயக்குகிறார். டி.ராஜேந்தர் பாடல் மற்றும் இசையை கவனிக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil