அந்த பிரபல நடிகருக்கு பதில் இவரா? தொடங்கியது கே.ஜி.எஃப் சாப்டர் 2 ஷூட்டிங்.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: ஷூட்டிங் நடத்த விதிமுறைகளை மத்திய அரசு வகுத்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பை கே.ஜி.எஃப் படக்குழு தொடங்கி உள்ளது.
Recommended Video
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் முதல் பாகம் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்பில் இணைந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

ஷூட்டிங் தொடங்கியாச்சு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக சினிமா ஷூட்டிங், தியேட்டர்கள் திறப்பு உள்ளிட்டவை முடக்கப்பட்டன. கடந்த 4 மாதங்களாக திரையுலகே முடங்கி இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சினிமா படப்பிடிப்புகள் தொடங்க ஆரம்பித்துள்ளன.

கே.ஜி.எஃப் ஷூட்டிங்
இந்த ஆண்டு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இறுதி காட்சிகள் படப்பிடிப்பு செய்து வந்த நேரத்தில், படப்பிடிப்புகளுக்கு ஏற்பட்ட தடை காரணமாக நடிகர் யஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ள அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷூட்டிங்கில் பிரகாஷ் ராஜ்
கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் பார்க்காத பல நடிகர்கள் இந்த கே.ஜி.எஃப் பார்ட் 2வில் ரசிகர்கள் பார்க்க உள்ளனர். நடிகர் சஞ்சய் தத் வில்லன் அதீராவாகவும், நடிகை ரவீணா டாண்டன் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்திலும் நடித்துள்ளனர். இந்நிலையில், சர்ப்ரைஸ் இணைப்பாக தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை
கே.ஜி.எஃப் படத்தில் வில்லன் அதிராவாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. அவரது போர்ஷன் முழுவதுமாக முடிந்து விட்டதா? இல்லையா என்ற தகவலை படக்குழு தெரிவிக்கவில்லை.

அந்த நடிகருக்கு பதிலாகவா
கே.ஜி.எஃப் படத்தில் இதுவரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக அறிவிப்பு ஏதும் வராத நிலையில், திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரகாஷ் ராஜ் உள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. முதல் பாகத்தில் ராக்கி பாயின் கதை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அனந்த் நாகுக்கு பதிலாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.

வைரல் மீம்களில்
கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாயின் கதையை சொல்லும் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அனந்த் நாக் நடித்திருப்பார். அவரது புகைப்படத்தை பதிவிட்டு, ஏகப்பட்ட மீம்களும் சமூக வலைதளத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது, அவர் ஏன் திடீரென நீக்கப்பட்டார் என்ற கேள்வியும் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்களால் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











