நாய் சேகர் மட்டும் ரிட்டர்ன் இல்லை..வடிவேலு கலக்கிய இன்னொரு படமும் வருது..ஜோரா பூஜை போட்ட சுந்தர்.சி

சென்னை: இயக்குநராக கலக்கி வந்த சுந்தர்.சி-க்கு நடிகராக மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் தலைநகரம்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர். சி நடிப்பில் உருவாக உள்ள தலைநகரம் 2 படத்தின் பூஜை புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

தலைநகரம் 2 பூஜை

தலைநகரம் 2 பூஜை

ஆனால், தலைநகரம் படத்தை இயக்கிய இயக்குநர் சுராஜ் இந்த படத்தை இயக்கவில்லை. அவருக்கு பதிலக இயக்குநர் VZ துரை இந்த படத்தை இயக்க உள்ளார். சுந்தர். சியின் தலைநகரம் 2 படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ள நிலையில், அதன் புகைப்படங்களை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

ஹிட் அடித்த இருட்டு

ஹிட் அடித்த இருட்டு

இயக்குநர் துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான பேய் படம் இருட்டு ஹிட் அடித்த நிலையில், மீண்டும் அதே வெற்றிக் கூட்டணி தொடர்வதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து தலைநகரம் 2 பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்

தலைநகரம் படத்தில் நாய்சேகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள நேரத்தில் தலைநகரம் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தலைநகரம் 2 படத்திலும் வடிவேலு நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வடிவேலு இருக்கிறாரா

வடிவேலு இருக்கிறாரா

ஆனால், தலைநகரம் 2 படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பாரா? என்பது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியாக ஹீரோவாக நடித்து வரும் வடிவேலுவுக்கு ஏகப்பட்ட படங்கள் அடுத்தடுத்து புக்காகி வரும் நிலையில் இந்த படத்தில் அவர் இணைய மாட்டார் என்றும் பட பூஜையில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதால் படக்குழுவும் அவரை அணுகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Sivakarthikeyan Speech | Naai Sekar Title Issue | Vadivelu | Sathish | Filmibeat Tamil
அரண்மனை 3 ரெடி

அரண்மனை 3 ரெடி

வரும் ஆயுத பூஜைக்கு அரண்மனை 3 படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கும் சுந்தர்.சி அடுத்ததாக ஹீரோவாக நடிக்க மும்முரம் காட்டி வந்த நிலையில் தான் மீண்டும் இயக்குநர் துரை உடன் இணைந்து தலைநகரம் 2 படத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இல்லாமல், புதிய டீமுடன் இந்த படத்தில் சுந்தர்.சி பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அரண்மனை 3ம் பாகத்தில் ஆர்யா நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. அரண்மனை 1 மற்றும் 2 போல இல்லாமல், இந்த படத்தின் கதையே வேற லெவலில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வழக்கமாக ஹீரோயினுக்கு பேய் பிடித்து அதனை சுந்தர்.சி ஓட்டி வந்த நிலையில், இந்த படத்தில் ஆர்யாவுக்கு பிடிக்கும் பேயை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான் ஹைலைட்டாம்.

குஷ்பு ஹீரோயினா

குஷ்பு ஹீரோயினா

சுந்தர். சி நடிப்பில் உருவாக உள்ள தலைநகரம் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார்? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சில ரசிகர்கள் சூப்பர் ஸ்லிம்மாக மாறியுள்ள நீங்களே நடிக்கலாம் மேடம் என்றும் கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X