»   »  திமிறும் கிரண்! திமிரு படத்தில் கிண் அழகி கிரணுடன் வடிவேலு செம ஆட்டம் போட்டிருக்கிறார்.சண்டக்கோழி படத்தைத் தயாரித்த ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம்திமிரு. நடிகர் விஷாலின் அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர்.முழு நீளஆக்ஷன் படமான திமிரில், விஷால் நடிப்போடு ஆக்ஷனிலும்எகிறியிருக்கிறாராம்.அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ரொம்பப் பழக்கமான ரீமாசென்.இன்னொருவர் செக்ஸ் சைரன் ஷ்ரேயா ரெட்டி. படம் முழுக்க ரீமாவும், ரெட்டியும்துள்ளி விளையாடியுள்ளார்களாம்.குறிப்பாக ஷ்ரேயா ரெட்டி கவர்ச்சியிலும், அதிரடி நடிப்பிலும் ரசிகர்களை அள்ளிக்கொண்டு போவது உறுதி என்று தலையில் தட்டி சத்தியம் செய்கிறார் விஷால்.இதற்கு முன்பு சில படங்களில் பாட்டுக்களில் மட்டும் தலைகாட்டியிருந்தாலும் திமிரு,ஷ்ரேயா ரெட்டியை ஒரு முக்கிய நடிகையாக மாற்றிவிடும் விடும் என்கிறது திமிருயூனிட்.இதில் முக்கியமான மேட்டர் கிரண்தான். செம குத்தாட்டம் ஒன்றில்கெட்ட ஆட்டம்போட்டுள்ளாராம் கிரண். விஷால் கூப்பிட்டார் என்பதற்காகத்தான் இந்தப் பாட்டைஒத்துக் கொண்டாராம் கிரண்.இதில் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பது வைகைப் புயல் வடிவேலு.இரண்டு பேரும் போட்டிருக்கும் இந்தக் குத்தாட்டம் ரசிகர்களை எகிற வைக்கும்என்கிறார்கள்.பாடலுக்கு இசையமைத்திருப்பது இளம் புயல் யுவன்ஷங்கர் ராஜா. பாடலைப்பாடியிருப்பது அவரோட சித்தப்பா கங்கை அமரனாம். ஸோ, பாட்டுக் கலக்கலாகஇருக்கும் என்று வேற சர்ட்டிபிகேட்கொடுக்கத் தேவையில்லை.இடையில் காணாமல் போய் விட்ட கிரண் திமிரு மூலம் கோலிவுட்டில் புத்தம் புதியகுத்தாட்ட சுந்தரியாக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். கிரண் கையில், இதுகாதல்வரும் பருவம் என்ற இன்னொரு படமும் இருக்கிறது.முன்னாடி இருந்ததை விட கணிசமான அளவு எடை குறைந்து, அழகு கூடி படுஅசத்தலாக இருக்கிறார் கிரண், தெரியுமோ?

திமிறும் கிரண்! திமிரு படத்தில் கிண் அழகி கிரணுடன் வடிவேலு செம ஆட்டம் போட்டிருக்கிறார்.சண்டக்கோழி படத்தைத் தயாரித்த ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம்திமிரு. நடிகர் விஷாலின் அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர்.முழு நீளஆக்ஷன் படமான திமிரில், விஷால் நடிப்போடு ஆக்ஷனிலும்எகிறியிருக்கிறாராம்.அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ரொம்பப் பழக்கமான ரீமாசென்.இன்னொருவர் செக்ஸ் சைரன் ஷ்ரேயா ரெட்டி. படம் முழுக்க ரீமாவும், ரெட்டியும்துள்ளி விளையாடியுள்ளார்களாம்.குறிப்பாக ஷ்ரேயா ரெட்டி கவர்ச்சியிலும், அதிரடி நடிப்பிலும் ரசிகர்களை அள்ளிக்கொண்டு போவது உறுதி என்று தலையில் தட்டி சத்தியம் செய்கிறார் விஷால்.இதற்கு முன்பு சில படங்களில் பாட்டுக்களில் மட்டும் தலைகாட்டியிருந்தாலும் திமிரு,ஷ்ரேயா ரெட்டியை ஒரு முக்கிய நடிகையாக மாற்றிவிடும் விடும் என்கிறது திமிருயூனிட்.இதில் முக்கியமான மேட்டர் கிரண்தான். செம குத்தாட்டம் ஒன்றில்கெட்ட ஆட்டம்போட்டுள்ளாராம் கிரண். விஷால் கூப்பிட்டார் என்பதற்காகத்தான் இந்தப் பாட்டைஒத்துக் கொண்டாராம் கிரண்.இதில் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பது வைகைப் புயல் வடிவேலு.இரண்டு பேரும் போட்டிருக்கும் இந்தக் குத்தாட்டம் ரசிகர்களை எகிற வைக்கும்என்கிறார்கள்.பாடலுக்கு இசையமைத்திருப்பது இளம் புயல் யுவன்ஷங்கர் ராஜா. பாடலைப்பாடியிருப்பது அவரோட சித்தப்பா கங்கை அமரனாம். ஸோ, பாட்டுக் கலக்கலாகஇருக்கும் என்று வேற சர்ட்டிபிகேட்கொடுக்கத் தேவையில்லை.இடையில் காணாமல் போய் விட்ட கிரண் திமிரு மூலம் கோலிவுட்டில் புத்தம் புதியகுத்தாட்ட சுந்தரியாக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். கிரண் கையில், இதுகாதல்வரும் பருவம் என்ற இன்னொரு படமும் இருக்கிறது.முன்னாடி இருந்ததை விட கணிசமான அளவு எடை குறைந்து, அழகு கூடி படுஅசத்தலாக இருக்கிறார் கிரண், தெரியுமோ?

Subscribe to Oneindia Tamil
திமிரு படத்தில் கிண் அழகி கிரணுடன் வடிவேலு செம ஆட்டம் போட்டிருக்கிறார்.

சண்டக்கோழி படத்தைத் தயாரித்த ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம்திமிரு. நடிகர் விஷாலின் அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர்.

முழு நீளஆக்ஷன் படமான திமிரில், விஷால் நடிப்போடு ஆக்ஷனிலும்எகிறியிருக்கிறாராம்.

அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ரொம்பப் பழக்கமான ரீமாசென்.இன்னொருவர் செக்ஸ் சைரன் ஷ்ரேயா ரெட்டி. படம் முழுக்க ரீமாவும், ரெட்டியும்துள்ளி விளையாடியுள்ளார்களாம்.

குறிப்பாக ஷ்ரேயா ரெட்டி கவர்ச்சியிலும், அதிரடி நடிப்பிலும் ரசிகர்களை அள்ளிக்கொண்டு போவது உறுதி என்று தலையில் தட்டி சத்தியம் செய்கிறார் விஷால்.

இதற்கு முன்பு சில படங்களில் பாட்டுக்களில் மட்டும் தலைகாட்டியிருந்தாலும் திமிரு,ஷ்ரேயா ரெட்டியை ஒரு முக்கிய நடிகையாக மாற்றிவிடும் விடும் என்கிறது திமிருயூனிட்.

இதில் முக்கியமான மேட்டர் கிரண்தான். செம குத்தாட்டம் ஒன்றில்கெட்ட ஆட்டம்போட்டுள்ளாராம் கிரண். விஷால் கூப்பிட்டார் என்பதற்காகத்தான் இந்தப் பாட்டைஒத்துக் கொண்டாராம் கிரண்.

இதில் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பது வைகைப் புயல் வடிவேலு.இரண்டு பேரும் போட்டிருக்கும் இந்தக் குத்தாட்டம் ரசிகர்களை எகிற வைக்கும்என்கிறார்கள்.

பாடலுக்கு இசையமைத்திருப்பது இளம் புயல் யுவன்ஷங்கர் ராஜா. பாடலைப்பாடியிருப்பது அவரோட சித்தப்பா கங்கை அமரனாம். ஸோ, பாட்டுக் கலக்கலாகஇருக்கும் என்று வேற சர்ட்டிபிகேட்கொடுக்கத் தேவையில்லை.

இடையில் காணாமல் போய் விட்ட கிரண் திமிரு மூலம் கோலிவுட்டில் புத்தம் புதியகுத்தாட்ட சுந்தரியாக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். கிரண் கையில், இதுகாதல்வரும் பருவம் என்ற இன்னொரு படமும் இருக்கிறது.

முன்னாடி இருந்ததை விட கணிசமான அளவு எடை குறைந்து, அழகு கூடி படுஅசத்தலாக இருக்கிறார் கிரண், தெரியுமோ?

Read more about: kiran in thimir

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil