மீரா ஜாஸ்மின் குழப்பத்தால்...
மீரா ஜாஸ்மின் செய்த குழப்பத்தால் 'கொல்கத்தா நியூஸ்'மலையாளப் படம் தீபாவளிக்குத் தள்ளிப் போய் விட்டதாம்.
இயக்குநர் பிளஸ்சி இயக்கத்தில், திலீப் நடிக்க உருவாகி வரும் படம் கொல்கத்தா நியூஸ். இப்படத்தை ஓணத்திற்கே கொண்டு வர திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் நாயகியான மீரா ஜாஸ்மின் செய்த பெரும் குழப்பத்தால் படம் படுதாவைத் தூக்க முடியாமல் பரிதவித்தபடி இருக்கிறது.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடந்து வருகிறது. இதுகுறித்து பிளஸ்சி கூறுகையில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்தால் நவம்பர் 8ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று நம்பிககை தெரிவித்தார்.
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த மீரா தற்போது சமர்த்துப் பெண்ணாக படப்பிடிப்புக்கு வந்து போகிறாராம், ஒத்துழைக்கிறாராம். தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க எவ்வளவு நேரமானாலும் முகம் சுளிக்காமல் முடித்துக் கொடுக்கிறாராம். இதை பயன்படுத்திக் கொண்டு பிளஸ்சியும் வேகமாக படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார்.
இந்தப் படத்தை முடித்த பின்னர் திலீப், ரோமியோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருடன் ஜோடி போடுவது கோபிகாவாம். மேகான்லாலின் ஹலோ படத்தை தயாரித்த ரபி மெக்கார்டின்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். ராஜசேன் இயக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











