»   »  ஷூட்டிங்ஸ்பாட்டில் 2 முறை மயங்கி விழுந்த ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்

ஷூட்டிங்ஸ்பாட்டில் 2 முறை மயங்கி விழுந்த ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அலகாபாத்: படப்பிடிப்பு தளத்தில் நடிகை க்ரிட்டி கர்பந்தா இரண்டு முறை மயங்கி விழுந்துள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் க்ரிட்டி கர்பந்தா. தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்த அவர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ப்ரூஸ் லீ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார்.

அவர் தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

வெயில்

வெயில்

வட இந்தியாவில் வெயில் கொளுத்துகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர அஞ்சுகிறார்கள். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்று அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இப்படி கொளுத்தும் வெயிலில் அலகாபாத்தில் ஷாதி மெய்ன் ஜரூர் ஆனா படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக நடித்து வருகிறார் க்ரிட்டி.

மயக்கம்

மயக்கம்

ஷூட்டிங்கில் கலந்து கொண்ட க்ரிட்டியால் வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர் மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

க்ரிட்டி

க்ரிட்டி

இரண்டு முறை மயங்கியும் பேக்கப் செய்யாமல் மீண்டும் நடிக்க வந்துவிட்டாராம் க்ரிட்டி. தன்னால் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதை அவர் விரும்பவில்லையாம். அவரின் கடமை உணர்ச்சயை பார்த்து படக்குழு வியந்துவிட்டது.

English summary
Actress Kriti Kharbanda has fainted in the sets of Rajkumar Rao starrer Shaadi Mein Zaroor Aana. She fainted when the shooting was going on outdoors in the scorching sun.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil