»   »  மணியம்மையாக நடித்தார் குஷ்பு

மணியம்மையாக நடித்தார் குஷ்பு

Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங்திருச்சியில் தொடங்கியுள்ளது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஞான ராஜசேகரன் படமாக்குகிறார்.இப்படத்திற்கு தமிழக அரசு ரூ. 90 லட்சம் மானியமாக வழங்குகிறது. இப்படத்தின்முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து முடிந்துள்ளது. தற்போது 2வது கட்டபடப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், பெரியாராக நிடிக்கிறார். அவரது முதல் மனைவிநாகம்மையாக நடிகை ஜோதிர்மயி நடிக்கிறார். 2வது மனைவி மணியம்மைவேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கு படத்தின் கேமராமேன்தங்கர்பச்சான் மற்றும் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ்ப் பெண்களின் கற்பையும் அவமதிக்கும் வகையில்பேசிய குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதை ஏற்க மாட்டோம் என்று பாமகஆவேசமாக கூறியது.

குஷ்பு நடித்தால் படப்பிடிப்பை தடுப்போம் எனவும் பாமகவினர் அறிவித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. யார் எதிர்த்தாலும் மணியம்மை வேடத்தில் நான்நடிப்பேன், யாருக்கும் பயப்பட மாட்டேன் என பதிலுக்கு குஷ்புவும் சவால் விட்டார்.

இந் நிலையில் குஷ்பு மணியம்மையாக நடித்தால் அந்தக் காட்சிகளை நான் படம்பிடிக்க மாட்டேன் என பெரியார் படத்தின் கேமராமேன் ஆன தங்கர் பச்சான்அறிவித்ததால் பரபரப்பு கூடியது. அவரை சமாதானப்படுத்த சத்யராஜும், ஞானராஜசேகரனும் முயன்றனர். ஆனால் தனது நலையில் பிடிவாதமாக இருந்து விட்டார்பச்சான்.

இருப்பினும் திட்டமிட்டபடி குஷ்புவை நடிக்க வைக்க படக் குழு முடிவு செய்தது.அதன்படி நேற்று திருச்சியில் மணியம்மையாக குஷ்பு நடிக்கும் காட்சிகளின்படப்பிடிப்பு தொடங்கியது.

ஆனால், இந்த காட்சிகளை தங்கர்பச்சான் படமாக்கவில்லை. அவரது உதவியாளர்மூலம் இந்த காட்சிகளை இயக்குனர் ஞானசேகரன் எடுத்தார்.

திருச்சியில் உள்ள பெரியார் மாளிகை, பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளிஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு குஷ்புமணியம்மையாக நடித்தார். அவருடன் சத்யராஜ் கலந்து கொண்ட காட்சிகளும்படமாக்கப்பட்டன.

குஷ்பு நிடிப்பதற்கு எதிர்ப்பு நிலவுவதால், படப்பிடிப்பு தளத்திற்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஷூட்டிங் வளாகத்திற்குள் படக் குழுவினரைத் தவிரவேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

படப்பிடிப்பைக் காண கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சத்யராஜ் மட்டும் பெரியார்கெட்டப்பிலேயே தோன்றி அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil