»   »  குஷ்பு சூட்டிங்-பாதுகாப்பு பெரியார் படத்தில் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவுள்ளார். இதற்கு பாமக மற்றும் பல்வேறு தமிழ்அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கற்பு புகழ் குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்கக் கூடாது, மீறிநடிக்க வைத்தால், படப்பிடிப்பை தடுப்போம் என பாமகவினர் கூறி வருகின்றனர்.பாமகவிடம் பாபா படம் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. ஆனாலும் பாமக எதிர்ப்பைப் பார்த்து நான் பயப்படப் போவதில்லை. அவர்களுக்கு வேறு வேலை வெட்டியேஇல்லையா என்று குஷ்பு கோபமாக கேட்டுள்ளார். இதனால் பாமகவினர் மேலும் சூடாகியுள்ளனர். இந் நிலையில் பெரியார் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், குஷ்பு சம்பந்தப்பட்டகாட்சிகளை அடுத்து எடுக்கவுள்ளனர். ஆனால் பாமக உள்ளிட்டோரின் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கை காரணமாககுஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது சிக்கல் ஏற்படலாம் என பெரியார் பட யூனிடட் அஞ்சுகிறது.இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ஞான ராஜசேகரன் முடிவு செய்துள்ளார்.முதல் கட்டமாக மணியம்மை பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட காட்சிகளைபடமாக்கத் திட்டமிட்டுள்ள ராஜசேகரன் அந்த சூட்டிங்கை ரகசியமாக நடத்தி முடிக்க தீர்மானித்துள்ளாராம்.குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசும் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த சிக்கல் ஏற்பட்டால் வேறு மாநிலத்திற்குப் போய் எடுக்கவும் ராஜசேகரன்தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குஷ்பு சூட்டிங்-பாதுகாப்பு பெரியார் படத்தில் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவுள்ளார். இதற்கு பாமக மற்றும் பல்வேறு தமிழ்அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கற்பு புகழ் குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்கக் கூடாது, மீறிநடிக்க வைத்தால், படப்பிடிப்பை தடுப்போம் என பாமகவினர் கூறி வருகின்றனர்.பாமகவிடம் பாபா படம் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. ஆனாலும் பாமக எதிர்ப்பைப் பார்த்து நான் பயப்படப் போவதில்லை. அவர்களுக்கு வேறு வேலை வெட்டியேஇல்லையா என்று குஷ்பு கோபமாக கேட்டுள்ளார். இதனால் பாமகவினர் மேலும் சூடாகியுள்ளனர். இந் நிலையில் பெரியார் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், குஷ்பு சம்பந்தப்பட்டகாட்சிகளை அடுத்து எடுக்கவுள்ளனர். ஆனால் பாமக உள்ளிட்டோரின் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கை காரணமாககுஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது சிக்கல் ஏற்படலாம் என பெரியார் பட யூனிடட் அஞ்சுகிறது.இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ஞான ராஜசேகரன் முடிவு செய்துள்ளார்.முதல் கட்டமாக மணியம்மை பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட காட்சிகளைபடமாக்கத் திட்டமிட்டுள்ள ராஜசேகரன் அந்த சூட்டிங்கை ரகசியமாக நடத்தி முடிக்க தீர்மானித்துள்ளாராம்.குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசும் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த சிக்கல் ஏற்பட்டால் வேறு மாநிலத்திற்குப் போய் எடுக்கவும் ராஜசேகரன்தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்தில் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது.

இந்தப் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவுள்ளார். இதற்கு பாமக மற்றும் பல்வேறு தமிழ்அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கற்பு புகழ் குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்கக் கூடாது, மீறிநடிக்க வைத்தால், படப்பிடிப்பை தடுப்போம் என பாமகவினர் கூறி வருகின்றனர்.

பாமகவிடம் பாபா படம் பட்டபாடு அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் பாமக எதிர்ப்பைப் பார்த்து நான் பயப்படப் போவதில்லை. அவர்களுக்கு வேறு வேலை வெட்டியேஇல்லையா என்று குஷ்பு கோபமாக கேட்டுள்ளார். இதனால் பாமகவினர் மேலும் சூடாகியுள்ளனர்.

இந் நிலையில் பெரியார் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், குஷ்பு சம்பந்தப்பட்டகாட்சிகளை அடுத்து எடுக்கவுள்ளனர். ஆனால் பாமக உள்ளிட்டோரின் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கை காரணமாககுஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது சிக்கல் ஏற்படலாம் என பெரியார் பட யூனிடட் அஞ்சுகிறது.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ஞான ராஜசேகரன் முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக மணியம்மை பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட காட்சிகளைபடமாக்கத் திட்டமிட்டுள்ள ராஜசேகரன் அந்த சூட்டிங்கை ரகசியமாக நடத்தி முடிக்க தீர்மானித்துள்ளாராம்.

குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசும் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த சிக்கல் ஏற்பட்டால் வேறு மாநிலத்திற்குப் போய் எடுக்கவும் ராஜசேகரன்தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil