»   »  குஷ்புவுக்கு தங்கர் எதிர்ப்பு! பெரியார் படத்தில் நடிகை குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை நான் படமாக்க மாட்டேன் என்று இயக்குநரும்,ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் கூறி விட்டார்.பெரியார் என்ற பெயரில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பெரியாரின் முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்கிறார்.2வது மனைவியான மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் குஷ்பு இவ்வேடத்தில் நடிக்க பலவேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பாமக கடுமையாகஎதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஷ்பு நடித்தால் போராட்டம் நடத்துவோம் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.ஆனால் யாருடைய எதிர்ப்பையும் கண்டு பயந்து விட மாட்டேன். மணியம்மையாக நான் தான் நடிப்பேன் என்று குஷ்பு கூறியுள்ளார். குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற23ம் தேதி முதல் காரைக்குடியில் படமாக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் ஞான ராஜசேகரன்.இந்த நிலையில் குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க பெரியார் படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர்பச்சானும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தங்கர் மறுத்து விட்டதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நடிகை நவ்யா நாயர் விவகாரத்தில் தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில் விழுந்து மன்னிப்புகேட்க வைத்த விவகாரத்தில் குஷ்புதான் முன்னணியில் இருந்தார்.நடிகைக்கும், அவரது மேக்கப் பெண்ணுக்கும் பணம் கொடுக்க்க கூட வக்கில்லாத நீயெல்லாம் எதற்காக படம்தயாரிக்கிறாய் என்று அப்போது தங்கரை ஒருமையில் குஷ்பு திட்டியதாக கூட செய்திகள் வெளியாகின.இதை தங்கர் இன்னும் மறக்கவில்லை. எனவேதான் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை தன்னால் எடுக்க முடியாதுஎன்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதையடுத்து தற்போது குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளைஒளிப்பதிவாளர் கண்ணன் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்என்பது நினைவிருக்கலாம்.தங்கர் விவகாரம் குறித்து இயக்குநர் ஞான ராஜசேகரன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். குஷ்புவிடம்கேட்டபோது, இது எனக்கு தெரியாது. எனது வேலை இயக்குநர் சொல்வதை கேட்பது மட்டுமே என்று மட்டும்தெரிவித்தார்.இன்னொரு பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி?

குஷ்புவுக்கு தங்கர் எதிர்ப்பு! பெரியார் படத்தில் நடிகை குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை நான் படமாக்க மாட்டேன் என்று இயக்குநரும்,ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் கூறி விட்டார்.பெரியார் என்ற பெயரில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பெரியாரின் முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்கிறார்.2வது மனைவியான மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் குஷ்பு இவ்வேடத்தில் நடிக்க பலவேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பாமக கடுமையாகஎதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஷ்பு நடித்தால் போராட்டம் நடத்துவோம் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.ஆனால் யாருடைய எதிர்ப்பையும் கண்டு பயந்து விட மாட்டேன். மணியம்மையாக நான் தான் நடிப்பேன் என்று குஷ்பு கூறியுள்ளார். குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற23ம் தேதி முதல் காரைக்குடியில் படமாக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் ஞான ராஜசேகரன்.இந்த நிலையில் குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க பெரியார் படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர்பச்சானும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தங்கர் மறுத்து விட்டதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நடிகை நவ்யா நாயர் விவகாரத்தில் தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில் விழுந்து மன்னிப்புகேட்க வைத்த விவகாரத்தில் குஷ்புதான் முன்னணியில் இருந்தார்.நடிகைக்கும், அவரது மேக்கப் பெண்ணுக்கும் பணம் கொடுக்க்க கூட வக்கில்லாத நீயெல்லாம் எதற்காக படம்தயாரிக்கிறாய் என்று அப்போது தங்கரை ஒருமையில் குஷ்பு திட்டியதாக கூட செய்திகள் வெளியாகின.இதை தங்கர் இன்னும் மறக்கவில்லை. எனவேதான் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை தன்னால் எடுக்க முடியாதுஎன்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதையடுத்து தற்போது குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளைஒளிப்பதிவாளர் கண்ணன் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்என்பது நினைவிருக்கலாம்.தங்கர் விவகாரம் குறித்து இயக்குநர் ஞான ராஜசேகரன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். குஷ்புவிடம்கேட்டபோது, இது எனக்கு தெரியாது. எனது வேலை இயக்குநர் சொல்வதை கேட்பது மட்டுமே என்று மட்டும்தெரிவித்தார்.இன்னொரு பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்தில் நடிகை குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை நான் படமாக்க மாட்டேன் என்று இயக்குநரும்,ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் கூறி விட்டார்.

பெரியார் என்ற பெயரில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பெரியாரின் முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்கிறார்.2வது மனைவியான மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் குஷ்பு இவ்வேடத்தில் நடிக்க பலவேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பாமக கடுமையாகஎதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஷ்பு நடித்தால் போராட்டம் நடத்துவோம் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.ஆனால் யாருடைய எதிர்ப்பையும் கண்டு பயந்து விட மாட்டேன்.

மணியம்மையாக நான் தான் நடிப்பேன் என்று குஷ்பு கூறியுள்ளார். குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற23ம் தேதி முதல் காரைக்குடியில் படமாக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் ஞான ராஜசேகரன்.

இந்த நிலையில் குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க பெரியார் படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர்பச்சானும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தங்கர் மறுத்து விட்டதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை நவ்யா நாயர் விவகாரத்தில் தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில் விழுந்து மன்னிப்புகேட்க வைத்த விவகாரத்தில் குஷ்புதான் முன்னணியில் இருந்தார்.

நடிகைக்கும், அவரது மேக்கப் பெண்ணுக்கும் பணம் கொடுக்க்க கூட வக்கில்லாத நீயெல்லாம் எதற்காக படம்தயாரிக்கிறாய் என்று அப்போது தங்கரை ஒருமையில் குஷ்பு திட்டியதாக கூட செய்திகள் வெளியாகின.

இதை தங்கர் இன்னும் மறக்கவில்லை. எனவேதான் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை தன்னால் எடுக்க முடியாதுஎன்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதையடுத்து தற்போது குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளைஒளிப்பதிவாளர் கண்ணன் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்என்பது நினைவிருக்கலாம்.

தங்கர் விவகாரம் குறித்து இயக்குநர் ஞான ராஜசேகரன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். குஷ்புவிடம்கேட்டபோது, இது எனக்கு தெரியாது. எனது வேலை இயக்குநர் சொல்வதை கேட்பது மட்டுமே என்று மட்டும்தெரிவித்தார்.

இன்னொரு பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil