twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படப்பிடிப்பில் விபத்து: குஷ்பு கால் எலும்பு முறிந்தது!

    By Shankar
    |

    Kushboo
    சென்னை: மிஸ்டர் மருமகன் என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்கில் குஷ்பு நிலை தடுமாறி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திலீப் நடிக்கும் 'மிஸ்டர் மருமகன்' என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார் குஷ்பு. கொச்சியில்இந்தப் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக ஒரு பங்களா செட் போடப்பட்டு இருந்தது. நேற்று அங்கு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. குஷ்பூ மாடிப்படிகள் வழியாக இறங்கி வருவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

    அப்போது மாடிப்படி செட் உடைந்ததால் குஷ்பூ கால் இடறி கீழே விழுந்தார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    குஷ்பூவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மயக்கம் தெளிய வைத்தனர். குஷ்பூவை பரிசோதித்த போது அவருடைய இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

    அதை தொடர்ந்து குஷ்பூ அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் 2 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இந்த விபத்து காரணமாக 'மிஸ்டர் மருமகன்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    English summary
    Actress Kushboo caught in accident at the shooting of Malayalam film Mr Marumagan. She is suffering bone fracture in the leg and hospitalised in a private hospital at Kochi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X