»   »  மீண்டும் வரும் லைலா

மீண்டும் வரும் லைலா

Subscribe to Oneindia Tamil

கன்னக் குழியழகி, அகல வாயழகி லைலா மீண்டும் திறமை காட்ட கோலிவுட்டுக்குவருகிறார்.

கள்ளழகர் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்த லைலா நீண்ட இடைவெளிக்குப் பிறகுபார்த்தேன் ரசித்தேன் படம் மூலம் ஹிட் நாயகி ஆனார். அதன் பிறகு முன்னணிநடிகர்களுடன் ஜோடி போட்டு கலக்க ஆரம்பித்தார்.

பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த பிதாமகன் லைலாவுக்கு பெரிய பெயரைவாங்கிக் கொடுத்தது. முன்பே நந்தா மூலமும் ரசிகர்களின் கவனிப்புக்குள்ளானவர்லைலா.

பாலாவையும், அவரையும் இணைத்து வதந்திகள் வரிசை கட்டி வந்தபோதும் அதைக்கண்டு கொள்ளாதவர் லைலா. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாககூட செய்திகள் வந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மும்பைக் காதலரைலைலா மணக்கப் போவதாக செய்திகள் வந்தன. வந்த வேகத்தில் கல்யாணத்தையும்முடித்துக் கொண்டார் லைலா.

கணவர் அனுமதித்தால் தொடர்ந்து நடிப்பேன் என லைலா அறிவித்தார்.கல்யாணத்தை முடித்து வந்து சூட்டோடு சூடோக அஜீத்துடன் திருப்பதி படத்தில்குமுக் குத்தாட்டம் போட்டு ஆச்சரியப்படுத்திய லைலா இப்போது சின்னஇடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் லைலாவுக்கு ஒரு முக்கிய வேடம்கொடுத்துள்ளார்களாம். இதில் விஜய்க்கு இரண்டு ஜோடி. முக்கிய கேரக்டருக்குயாரைப் போடலாம் என யோசித்தபோது லைலாவை யோசித்து அவரை அணுகினர்.அவரும் சம்மதித்தாராம்.

அட்டகாச டான்ஸரான லைலா சூர்யா, அஜீத், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன்நடித்தவர். ஆனால் விஜய்யுடன் அவர் இணைந்ததில்லை. இப்போது விஜய்யுடன்இணைந்து அந்த குறையையும் போக்கி விட்டார்.

குமுக் ஆட்டம் போடுவாரா அல்லது குத்துவிளக்கு கணக்காக நடிப்பாரா என்பதைலைலா இன்னும் விளக்கவில்லை.

Read more about: laila is back in tamil films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil