சூட்டிங் ஸ்பாட்

By Staff

நடிகை ரம்பா தயாரித்து வரும் த்ரீரோசஸ் படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகைலைலா விபத்தில் சிக்கினார். அவரது குதிகால் மூட்டு ஜவ்வு கிழிந்தது.

இந்த படத்தில் ரம்பா, லைலா, ஜோதிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடந்தது. இதில் சாலையில் வரிசையாகநிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களின் மீது வில்லன் கோஷ்டியினரை நடிகைகள் மூவரும் விரட்டிப் பிடித்து தாக்குவதுபோல காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சியில் லைலா நடித்துக் கொண்டிருந்த போது லைலா கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது குதிகால்பகுதியில் பலத்த அடிபட்டது. உடனே ஜோதிகா அவருக்கு ஐஸ் கட்டி மூலம் அடிபட்ட இடத்தில் தடவி முதல் உதவிசெய்தார்.

பின்னர் லைலா தனியார் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது டாக்டர்கள் அவரின் குதிகாலும், பாதமும் சேரும் இடத்தில் உள்ள ஜவ்வு கிழிந்திருப்பதாகதெரிவித்தனர்.

அதனால் அவர் 15 நாட்கள் ஓய்வு எடுத்தப் பிறகே எழுந்து நடக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.இதனால் லைலா மும்பையில் சிகிச்சைப் பெறுவதற்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை விமானம் மூலம்மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X