»   »  துள்ளும் லட்சுமிபிரியா

துள்ளும் லட்சுமிபிரியா

Subscribe to Oneindia Tamil

துள்ளுவதோ இளமைக்குப் பிறகு வாலிப, வயோதிகர்களைக் கவரும் வகையில் கலகலப்பான படத்துடன் வருகிறார் கஸ்தூரி ராஜா.

இது காதல் வரும் பருவம். இதுதான் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். படம் முழுக்க இளமைப் பட்டாளங்களின் கொட்டம் தாண்டவமாடுகிறதாம்.

சூப்பர் ஸ்டாரின் சம்பந்தியான கஸ்தூரி ராஜா, இப்படத்தில் சூப்பராக ஒரு மெசேஜ் வைத்துள்ளாராம். படத்தின் கதையைப் பற்றி கஸ்தூரிராஜாவிடம் கேட்டால், செக்ஸ் மோகத்தில் படிப்பை மறந்து, பெற்றோரைத் துறந்து செக்ஸ் வயப்பட்டுப் போகும் இளசுகளை அது தவறு என்று சரியான பாதைக்குத் திருப்புவதுதான் இந்தப் படத்தின் கதை பிளஸ் மெசேஜ் என்று துள்ளலாக கூறுகிறார் ராசா.

இப்படத்தில் சின்ன வயசுப் பசஙக்ளான ஹரீஷ்குமார் ஹீரோவாகவும், மாடல் மயில் லட்சுமிப்பிரியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். படத்தின் முக்கால்வாசிப் பாகம் வரை இருவரும் அடிக்கும் கொட்டம்தான் ஆக்கிரமித்துள்ளதாம்.

லட்சுப் பிரியா படு லாவகமாக இருக்கிறார். படம் முழுக்க இளமை விருந்து படைத்து, ரசிகர்களை ஏங்க வைக்கக் காத்திருக்கிறார். திமிறும் அழகுடன், குமுறியுள்ளாராம் லட்சுமிப் பிரியா.

கஸ்தூரி ராஜா காட்சிகளை கோடிட்டுக் காட்டியவுடனேயே பச்சக் என்று பிடித்துக் கொண்டு கூட்டிக் கொடுத்து கும்மாக நடித்துள்ளாராம் லட்சுமிப் பிரியா. அவர் வரும் காட்சிகள் அத்தனையும் விஷூவல் விருந்தாக அமைந்துள்ளதாம்.

கவர்ச்சிக்கு புது இலக்கணம் வகுக்கும் வகையில் படு பாஸ்ட்டாக நடித்துள்ளாராம் லட்சுமிப் பிரியா. துள்ளுவதோ இளமைக்குப் பிறகு ஷெரீனுக்கு எப்படி கிராக்கி ஏற்பட்டதோ (அதை அவர் யூஸ் பண்ணத் தவறியது தனிக் கதை!) அதேபோல லட்சுமிப் பிரியாவுக்கும் ஒரு கும்தலக்க கிராக்கி ஏற்படப் போவது உறுதி என்கிறது அவரோட திறமையை கூட உட்கார்ந்து கும்மியடித்துப் பார்த்து ரசித்த யூனிட்.

படத்தின் ஹீரோவைப் பார்த்தால் நம்ம தனுஷ் மாதிரியே இருக்கிறார். இதில் சின்னப் பையன் ஹரீசை மயக்கும் குஜால் கேரக்டரில் கிரண் நடித்திருக்கிறார்.

கஸ்தூரி ராஜா படமாச்சே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil