»   »  நெஞ்சை தொடும் லட்சுமி ராய்!

நெஞ்சை தொடும் லட்சுமி ராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லட்சுமியின் முழு நீல நடிப்பில் நெஞ்சைத் தொடு படம் படு சூடாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

கற்க கசடற படத்தில் படு அழகாக தனது கிளாமரை வெளிப்படுத்திய லட்சுமி ராய்க்கு கோலிவுட் பெரியஅளவில் கை கொடுக்கவில்லை. இருந்தாலும் ராய்க்கும் சில படங்கள் வரத்தான் செய்தது.

குண்டக்க மண்டக்க படத்தில் இதற்கு மேல் எப்படிய்யா காட்ட முடியும் என்ற ரேஞ்சுக்கு கிளாமரில் கதகளிஆடிப் பார்த்தார் லட்சுமி ராய். அப்படியே கேப்டனுடன் தர்மபுரி படத்திலும் தாளம் போட்டார்.

அப்படியும் இப்படியுமாக வாய்ப்புகள் ஊசலாட்டத்தில் இருந்ததால் தெலுங்குப் பக்கம் கண்ணை ஓட்டிப்பார்த்தார். ஆனால் அவர்களோ இலியானா இடுப்பிலிருந்து இறங்குவது போலத் தெரியவில்லை. மறுபக்கம்திரிஷாவோ தீயாக பின்னிக் கொண்டிருக்கிறார்.

இதனால் மறுபடியும் தமிழிலேயே தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளார் ராய். இப்போது நடித்து வரும்நெஞ்சைத் தொடு படத்தில் கிளாமரில் திமிறிக் குமுறிக் கொண்டிருக்கிறாராம் லட்சுமி ராய். இந்தப் படத்தைவைத்து அடுத்தடுத்து நிறையப் படங்களைப் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், டைரக்டர்கேட்காமலேயே வாலண்டியராக கிளாமரில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாராம் லட்சுமி.

எதைச்சையாக நீலாங்கரைப் பக்கம் நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனால், லட்சுமியின் உதடுகளுடன்உறவாடிக் கொண்டிருந்தார் ஹீரோ ஜெமினி. உணர்ச்சி சுனாமியை உசுப்பேத்தும் வகையிலான அந்த ஒருகாட்சியே ஒரு பானை சோத்துக்குப் பதம் போல படு இதமாக இருந்தது.

இந்தப் படத்தில் லட்சுமி ராய்க்கு நீச்சல் காட்சிகள் எல்லாம் கூட இருக்கிறதாம். டூ பீஸில் படு பாந்தமாக வந்துரசிகர்கள் மனதில் பந்தம் ஏற்றக் காத்திருக்கிறாராம் லட்சுமி.

லட்சுமியின் இந்த ஏகோபித்த ஒத்துழைப்பால் சந்தோஷமாகிப் போயுள்ளாராம் இயக்குநர் ராஜகண்ணன். இப்படிஒரு நடிப்பை நான் பார்த்ததே இல்லை என்று புல்லரித்துப் போய் பேசுகிறார் கண்ணன்.

உதட்டோர உலாவை முடித்து விட்டு வந்த ராயிடம், எப்படி இருந்தது 2006, எப்படி இருக்கப் போகிறது 2007என்று ஆரம்பித்தோம். எனது ஆரம்பம் அமர்க்களாமாகத்தான் இருந்தது. ஆனால் சில தவறான படங்கைளதேர்வு செய்து நடித்து விட்டதால் மார்க்கெட் சூடு பிடிக்காமல் போய் விட்டது.

இருந்தாலும் இப்போது நல்ல நல்ல படங்கள் வருகின்றன. எனக்கு டான்ஸ் நன்றாகப் பண்ணத் தெரியும். அதைமையமாக வைத்து ஏதாவது படங்கள் கிடைத்தால் பின்னிடலாம் என இருக்கிறேன். ஆனால் வருவது போலத்தெரியவில்லை.

இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சைத் தொடு படத்தில் எனக்கு கிளாமரோடு, நடிக்கவும் நல்ல வாய்ப்பு.அதனால்தான் கிளாமர் பத்தி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று படு கூலாக பேசுகிறார் ராய்.

2007ல் நிறையப் படங்கள் நடிக்க உறுதி பூண்டுள்ளேன். நாலு படம் நடித்தாலும் நச்சென்று இருக்க வேண்டும்(ரசிகர்களுக்கு கிக் கென்று இருந்தால் பிடிக்குமாம்!). வெறுமனே கிளாமர் மட்டும் காட்டிக் கொண்டிருந்தால்அது உருப்படாது. அதனால்தான் நடிப்புடன் கூடிய கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டுகிறேன்.

இச்சையுடன் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருக்கும் ராய்க்கு, 2007 பசுமையாக இருக்கட்டும்!

Read more about: lakshmi rais nenjai thodu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil