»   »  ரகளை செய்யும் ராய்!

ரகளை செய்யும் ராய்!

Subscribe to Oneindia Tamil

ரிச்சான குத்துப் பாட்டு, நெகிழ்ச்சியான கிளாமர் காட்சிகளுடன் நெஞ்சைத் தொடு படம் உருவாகி வருகிறது.

ஜெமினி என்கிற புதுமுகப் பையன் திறமை காட்டும் படம்தான் நெஞ்சைத் தொடு. தலைப்புக்கேற்ப நெஞ்சைத்தொட்டு, துவள வைக்கும் வகையில் ஏகப்பட்ட காட்சிகளை வைத்துள்ளார்களாம்.

படத்தின் நாயகி லஜ்ஜாவதி லஷ்மி ராய். ரொம்ப ஈடுபாட்டோடு திறமை காட்டி வருகிறார் இப்படத்தில்.ராயம்மா கையில் வேறு படங்கள் திருப்திகரமாக இல்லாததால், இந்தப் படத்தின் மூலம் மறுபடியும் ஒருரவுண்டுக்கு முயற்சிக்கத் திட்டமாம்.

காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளும் ரசிகர்களை நெளிய வைக்கும் வகையில் புகுந்து விளையாடியுள்ளார்லஷ்மி ராய். படத்தில் இவரை விட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் ரிஷாதான்.

லஷ்மி ராய் ரகளையாக இருக்கிறார் என்றால் ரிஷா, படு மஜாவாக இருக்கிறார். குத்துப் பாட்டுக்காக கூட்டிவரப்பட்டவர் என்பதால், அதற்கேற்ற அத்தனை அம்சங்களும் படு அமர்க்களமாக இருக்கிறது ரிஷாவிடம்.

சொல்லிக் கொடுத்த மீவ்மென்டுகளை படு ஜாலியாக செய்து அசத்தி விட்டாராம். பாவம், கூட ஆடியஜெமினிதான் அசந்து போய் விட்டாராம்.

நெஞ்சைத் தொடு என்று பெயர் வைத்தாகி விட்டது. அப்படிப்பட்ட காட்சிகள் இல்லாமல் போனால் நன்றாகஇருக்காது என்பதால் ராய்-ரிஷாவை வைத்து ரசிகர்களின் நெஞ்சை சொறண்ட முடிவு செய்து விட்டார்களோஎன்னவோ!

Read more about: laksmi rai in nenjai thodu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil