»   »  நெஞ்சை தொடும் லஷ்மி ராய்

நெஞ்சை தொடும் லஷ்மி ராய்

Subscribe to Oneindia Tamil

முழு நீள கவர்ச்சிக்கு மாறி லஷ்மி ராய் கலக்கியெடுக்கும் படம் நெஞ்சைத் தொடு. சமீபத்தில் படு சூடான ஒருகாட்சியை பல நூறு பேர் முன்னிலையில் படமாக்கி அத்தனை பேருக்கும் அடிவயிற்றில் சூட்டைக்கிளப்பினார்களாம்.

பெல்காம் பேரழகி லஷ்மி ராய் இதுவரை பெரிய ரேஞ்சுக்கு வர முடியவில்லை. அவரும் கிளாமரை அப்படியும்இப்படியுமாக புரட்டிப் போட்டுத்தான் பார்க்கிறார். ஆனாலும் உச்சாணிக்கு வரும் வாய்ப்புதான் கிடைக்கவேமாட்டேங்குதாம்.

இருந்தாலும் லஷ்மியும் விடுவதாக இல்லை. தொடர்ந்து கிளாமர் ரோல்களே செய்து அசத்தி வருகிறார். ஜெமினிஎன்ற புதுமுகத்தோடு அவர் நடிக்கும் நெஞ்சைத் தொடு படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் விஜிபி கோல்டன் பீச்சில்நடந்தது.

லஷ்மி ராயை தரிசிக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்க அவர்களுக்கு நடுவே லஷ்மி ராய் கலந்துகொண்டு ஆடிப் பாடிய பாடல் காட்சியை படமாக்கினர்.

இந்தப் பாட்டுக்காக லஷ்மி ராய்க்கு கொடுத்த டிரஸ்ஸைப் பார்த்து அவர் பயந்து போய் விட்டாராம். இதெல்லாம்நான்கு சுவர்களுக்குள் மட்டுமே போடக் கூடிய டிரஸ், இதை வெளியில் போட்டு நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

இதையடுத்து வேறு ஒரு டிரஸ்ஸை வரவழைத்தார்களாம். அந்த டிரஸ்ஸும் கூட கோக்கு மாக்காகத்தான்இருந்ததாம். இதனால் அதற்கு மேல் ஒரு டிரஸ்ஸைப் போட்டு கிளாமர் எழுச்சியை கொஞ்சம் போல குறைத்துக்கொண்டு வெளியே வந்தார் லஷ்மி.

கிளாமரான அந்த டிரஸ்ஸுடன் வெளியே வந்த லஷ்மியைப் பார்த்து கூடியிருந்த ரசிகர்கள் குதூகலித்துப் போய்விட்டனராம். ஆனால் லஷ்மிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றதாம். எனவே ஒரு துண்டைத் தூக்கி மேம்போக்காகபோட்டு சுமாராக மூடிக் கொண்டு நின்றிருந்தாராம்.

பிறகு பாடல் காட்சியின் போது துண்டை தூக்கி தூரப் போட்டு விட்டு கும்மாளமாக ஆடிக் கொடுத்தார் லஷ்மி.இப்படி கர்ச்சீப் துணிக் கணக்கில் உடுத்திக் கொண்டு உலுப்புகிறீர்களே என்றால், எனக்கே கூட அலுப்பாகத்தான்இருக்கு. ஆனாலும், இதைத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள். அதைக் கொடுப்பதுதானே ஒரு நடிகையின்கடமை என்று படா தத்துவமாக பேசுகிறார்.

கிளாமர் காட்டலாம், அது அழகாகவும், அளவகாவும் இருக்க வேண்டும். அதை மீறினால்தான் தப்பு என்றும்விளக்குகிறார். இப்படத்தில் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கும் அழகியாக வருகிறாராம் லஷ்மி ராய்.அழகான வேடம்தான்...

Read more about: lakshmi rai in nenjai thodu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil