மயங்கிய லஷ்மி ராய்

By Staff
"அதென்ன ராய்? என்று கேட்டால் நான் ஐஸ்வர்யாராயின் சொந்தமாக்கும் என்கிறார் ஆர்.வி. உதயகுமார் இயக்கும் கற்க கசடற.. நாயகிலஷ்மி ராய்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்.வி. உதயகுமார் இயக்கும் கற்க கசடற..படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் பெங்களூர் தக்காளி லஷ்மிராய்.

தற்போது பிளஸ் டூ படித்து வரும் இவர் 2003 -ல் மிஸ் பெல்காமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தப் புகழின் மூலம் கன்னடத்தில் வால்மீகிஎன்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து இவரை நேராக கோலிவுட் அழைத்து வந்து விட்டார் உதயகுமார்.

தமிழில் முதல் படத்திலேயே பிரபலமான நடிகருடன் நடிக்க முடியாவிட்டாலும் ஒரு விதத்தில் அவருக்கு சந்தோஷம் தான். ஏனென்றால்கற்க கசடற.. படத்தின் ஹீரோ விக்ராந்த் இளைய தளபதி விஜய்யின் சித்தி மகன் என்பது தான்.

விஜய்யின் தம்பியுடன் ஜோடி சேர்ந்து விட்டதால் விரைவில் இளைய தளபதியுடனும் இணைந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன்கூறுகிறார்.

கவர்ச்சியாக நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறும் இவர், ரேவதி, குஷ்பு, சுகாசினி ஆகியோரைப் போல குடும்பப்பாங்கான வேடங்களிலும் கலக்க ஆசை என்கிறார்.

கற்க கசடற.. படத்தில் இதழோடு இதழ் பதிக்கும் ஒரு சூடான காட்சியில் நடித்திருக்கிறார். இந்தப்பட சூட்டிங்கின் போது ஒரு பரபரப்பானசம்பவம் நடந்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆதிரப்பள்ளி என்ற இடத்திலுள்ள நீர்வீழ்ச்சி அருகே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மின்மினிக்கண்களில் கனவுகள்பிறக்காதா... என்ற பாடலை உதயகுமார் படமாக்கிக்கொண்டிருந்தார்.

இந்தப் பாடல் காட்சியில் லஷ்மி ராயுடன் இணைந்து துணை நடிகைகள் பலர் ஆடினர். பாடலின் இரண்டு வரிகள் படமாக்கப்பட்டநிலையில் அடுத்த வரிகளை படமாக்க டைரக்டர் தயாராக இருந்தார்.

அப்போது நாற்காலியில் அமர்ந்திருந்த லஷ்மி ராய் திடீரென பொத்தென்று விழுந்தாராம். வாந்தியும் எடுத்தாராம். இதனால் பதறிப்போனஇயக்குனரும், படப்பிடிப்புக்குழுவினரும் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் லஷ்மி ராய், காலையில் சாப்பிடவே மாட்டாராம்.

இது தான் திடீர் வாந்தி, மயக்கத்திற்கு காரணம். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை என்கிறார் லஷ்மி ராயின் உதவியாளர்.

கன்னடத்துக்கிளியாக இருந்தாலும் தமிழில் இவர் பொளந்து கட்டுகிறார். இது எப்படி என்று கேட்டால்... நான் இவ்வளவு சீக்கிரம் தமிழ்படிக்க காரணம் டைரக்டர் உதயகுமார் தான். தமிழ் நன்றாக படித்தால் தான் என்னுடைய படத்தில் உனக்கு வாய்ப்பு என்று கூறிவிட்டார்.

வேறு வழியில்லையே.. ஒரு உதவியாளரைப் போட்டு தமிழை ஒரு வழியாக படித்து தேறிவிட்டேனாக்கும்.. என்று பெருமையுடன்கூறுகிறார்.

ஒரு சீன் நன்றாக வரவில்லையென்றால் உதயகுமார் கன்னா பின்னாவென்று திட்டி விடுவார். பலமுறை அவரிடம் திட்டு வாங்கிவிட்டேன்என்று இவர் அழாத குறையாக கூறுகிறார்.

மோதிரக்கையால் குட்டு வாங்கியிருக்கிறேன். நிச்சயமாக தமிழில் ஒரு ரவுண்டு வருவேன் என்று இவர் உற்சாகமாக இவர் கூறுகிறார்.பெஸ்ட் ஆப் லக் மேடம்..

More from Filmibeat

Read more about: actress cinema films ramya swarnamalya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X