சூட்டிங் ஸ்பாட்
வல்லரசு படத்தை இயக்கிய டைரக்டர் மகராஜன் அடுத்து இயக்கப் போகும் படம் அரசாட்சி.
விஜயகாந்த் டைரக்டர் என்ற பெயர் பெற்ற மகராஜன் இயக்கப் போகும் இந்தப் படத்தில் ஹீரோ அர்ஜூன்.
இவருக்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் உலக அழகி லாரா தத்தா.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு லாரா தத்தாவைத் தேர்வு செய்துள்ளார்களாம்.
தமிழ் படங்களில் நடிக்க உலக அழகிகள் போட்டி போடுவது தெரிந்தது தான். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென்னைைத் தொடர்ந்து தமிழுக்கு வந்துள்ளார்கள் யுக்தா முகியும் லாரா தத்தாவும்.
தன் பெயரே மகாராஜன் என்பதாலோ என்னவோ, வல்லரசு... அரசாட்சி... என அடுத்தடுத்து அரசன், ஆட்சிதொடர்பான தலைப்பையே வைக்கிறார்.
அடுத்த படத்துக்கு தலைப்பு என்ன பேரரசா, மகாராஜன்?
"பா.வியைப் பாராட்டிய சரத்குமார்
சமுத்திரம் படத்தில் வரும் ஒரு பாடலைக் கேட்ட ஹீரோ சரத்குமார் ரொம்பவும் சந்தோஷமாகி விட்டாராம்.மைசூரில் இருந்த அவர் உடனடியாக சென்னைக்கு போன் போட்டு பாடலை எழுதிய கவிஞர் பா.விஜயைப்பாராட்டினாராம்.
தேவாவின் சகோதரர்கள் சபேஷ்-முரளிதான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள். வளர்ந்து வரும்கவிஞரான பா.விஜய் தொடர்ந்து பல ஹீரோக்கள், இசையமைப்பாளர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











