வெற்றிமாறன் தயாரிப்பில் இணையும் லாரன்ஸ்... ஜனவரியில் துவங்கும் படப்பிடிப்பு!
சென்னை : வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படம் அதிகாரம்.
இன்றைய தினம் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்றைய தினம் தன்னுடைய பிறந்ததினத்தை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடித்துவரும் படத்தின் டைட்டில் ருத்ரன் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் அவரது சகோதரருடன் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரம் படம்
இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் அவர் இணைந்துள்ள அதிகாரம் படத்தின் புதிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ் பிறந்தநாள்
லாரன்சின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் லாரன்சின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதனிடையே, இந்த பதிவிற்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கம்
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த துரை செந்தில்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக அதிகாரம் படம்மூலம் ராகவா லாரன்சுடன் இணைகிறார்.
Recommended Video

பான் இந்தியா படம்
பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த கதிரேசனின் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளன.

வெற்றிமாறன் கதை
இந்தப் படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதவுள்ளார். பிரம்மாண்டமான வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் படப்பிடிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் 50 நாட்களும் இந்தியாவின் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வெற்றிமாறன் கதையில் செந்தில்குமாரின் இயக்கத்தில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











