வெளியானது லியோ விஜய் லுக்.. காட்டுக்குள் மாஸ் காட்டும் தளபதி.. அடுத்தடுத்த வீடியோக்கள்!

சென்னை : நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த காம்பினேஷன் இணைந்துள்ளது.

லியோ படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் என சிறப்பான நடிகர்கள் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள், போஸ்டர்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

விஜய்யின் லியோ படம்

விஜய்யின் லியோ படம்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விக்ரம் படத்தின் அதிரிபுதிரி வெற்றியைத் தொடர்ந்து லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள், போஸ்டர்கள், வீடியோக்கள் வெளியாகி இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

காஷ்மீர் சூட்டிங் நிறைவு

காஷ்மீர் சூட்டிங் நிறைவு

படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் நடிகை த்ரிஷா. நீண்டு ஆண்டுகளுக்கு பிறந்த இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக்கு இது மேலும் வலுக்கூட்டியுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிவரும் சூழலில் படத்தில் விஜய்யுடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாக முன்னதாக ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காஷ்மீரில் படத்தின் சூட்டிங் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.

சென்னை திரும்பிய லியோ டீம்

சென்னை திரும்பிய லியோ டீம்

இதனிடையே நேற்றைய தினம் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், விஜய் உள்ளிட்ட லியோ படக்குழுவினருக்கு என்ன ஆனதோ என்று ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். ஆனால், தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சில தினங்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் சூட்டிங்கை தொடங்கி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சூட்டிங்கில் ஏற்பட்ட கஷ்டம்

இந்நிலையில் காஷ்மீரில் சூட்டிங் நடத்த படக்குழுவினர் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது குறித்த வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடுமையான குளிரில் ஒவ்வொரு விஷயத்திற்கும் எவ்வளவு மெனக்கெடல் தேவைப்பட்டது என்பது குறித்து இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இவ்வளவு மெனக்கெட்ட போதிலும் லோகேஷ் கனகராஜின் சுறுசுறுப்பு தங்களையும் சிறப்பாக செயல்பட வைத்ததாகவும் படக்குழுவினர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் வீடியோவும் வெளியீடு

விஜய்யின் வீடியோவும் வெளியீடு

இதனிடையே விஜய் தனியாக சூட்டிங்கில் நடித்த காட்சிகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனிடையே விஜய் காட்டிற்கும் மாஸ் காட்டும் புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் படத்தில் விஜய்யின் முழுமையான கெட்டப் தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீர் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

படக்குழுவினருக்கு லோகேஷ் நன்றி

இதனிடையே கடுமையான குளிரில் சிறப்பாக செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மக்களை என்டர்டெயின் செய்யும் பணியில் இத்தகைய கடுமையான பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ட்வீட்டிற்கு சக படக்குழுவினர் இது தங்களது வேலைதான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X