தளபதி 64 டீமுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: தளபதி 64 டீமுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், பிரேம், செளந்தர்யா, ரம்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் தளபதி 64 படத்தில் நடித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் தளபதி 64 படத்தின் 4ம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தளபதி 64 படக்குழுவினர் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களை பதிவிட்டு தளபதி ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் படக்குழுவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
லைஃப் டைம் செட்டில்மென்ட்
கைதி படத்தில் வில்லன் அர்ஜுன் தாஸ், போலீஸ்காரர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் டா என்ற வசனத்தை பேசியிருப்பார். அந்த வசனம் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது. தளபதி 64 படத்தில் இணைந்துள்ள சினிமாவாலா தயாரிப்பாளர் சதீஷ் விஜய் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு லைஃப் டைம் செட்டில்மென்ட் என இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு பதிவிட்டுள்ளார்.

செம்ம ஸ்டைல்
தளபதி 64 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலர்ஸ் போட்டு செம்ம ஸ்டைலாக அந்த புகைப்படத்தில் இருக்கிறார். அவரது ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் செம்ம ஸ்டைல் ப்ரோ என வாழ்த்தி வருகின்றனர்.

தளபதி 64 டீம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக், தினேஷ் மாஸ்டர் உள்ளிட்ட தளபதி 64 படக்குழுவை சேர்ந்தவர்கள் அந்த புகைப்படத்தில் இருக்கின்றனர்.
ராசா செல்லங்களா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினரை பார்த்து இந்த ரசிகர், ராசா செல்லங்களா பாத்து பண்ணுங்க. திரைக்கதை கொஞ்சம் வேகமா பண்ணுங்க, நல்லா டான்ஸ் வேணும் ஒரு பாட்டா இருந்தாலும் போதும் என கமெண்ட் செய்துள்ளார்.
வடசென்னையை விட
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தின் 3 பாகங்கள் எடுத்தாலும் இந்த அளவுக்கு கேஸ்டிங் இருக்காது, நடிகர்கள் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறதே என இந்த ரசிகர் கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











