விக்ரம் படத்தில் உலகநாயகனின் வெறித்தனமான ஆக்‌ஷன் இருக்கு.. ரிலீஸ் எப்போன்னு லோகேஷே சொல்லிட்டாரு!

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் வெறித்தனமான ஆக்‌ஷன் காட்சியை விக்ரம் படத்தில் பார்க்கலாம் என தெரிகிறது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசிலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் வெளியான க்ளிம்ஸ் காட்சியில் சிறையில் இருந்து நரேன் உள்ளிட்டவர்களை கமல் மீட்டுக் கொண்டு போகும் காட்சியே படு மிரட்டலாக இருந்தது.

மீண்டும் விக்ரம்

மீண்டும் விக்ரம்

1986ம் ஆண்டு சுஜாதா திரைக்கதையில் இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. உலகநாயகனின் ஃபேன் பாயான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் 'விக்ரம்' எனும் டைட்டிலிலேயே கமல்ஹாசனை இயக்கி வருகிறார்.

மூன்று சிங்கங்கள்

மூன்று சிங்கங்கள்

கமல்ஹாசன், விக்ரம் மற்றும் பகத் ஃபாசில் என மூன்று நடிப்பு சிங்கங்கள் இணைந்து மிரட்டப் போகும் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை அதி வேகமாக நடத்தி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவ்வப்போது விக்ரம் படத்தின் அப்டேட்களை போட்டு ரசிகர்களை ஆர்பரிக்க வைத்து வருகிறார்.

வெறித்தனமான சண்டை காட்சி

வெறித்தனமான சண்டை காட்சி

விஸ்வரூபம் படத்தில் அம்பி டு அந்நியனாக கமல் மாறும் ஆக்ரோஷ சண்டை காட்சி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது. கைதி மற்றும் மாஸ்டர் படங்களில் வெறித்தனமான சண்டை காட்சிகளை இயக்கி இருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது உலகநாயகனை வைத்து சண்டை காட்சி ஒன்றை படமாக்கி உள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

கொரோனா, கால் வலி

கொரோனா, கால் வலி

கமலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை எல்லாம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து காலில் வலி இருந்து கொண்டே இருக்கிறது. மேலும், சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று குணமான நிலையில், மீண்டும் கமல் எந்த மாதிரியான ஒரு ஸ்டன்ட் பண்ணியிருக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் உடன் மோதல்

பீஸ்ட் உடன் மோதல்

சண்டை காட்சி அப்டேட் மட்டுமின்றி படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் என்கிற அசத்தல் அறிவிப்பையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன், பீஸ்ட், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பல படங்கள் சம்மர் ரிலீஸை குறிவைத்து இருக்கும் நிலையில், விக்ரமும் தற்போது அந்த யுத்தத்தில் கலந்து கொள்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X