மகாநடிகன் சிம்பு.. மாநாடு படத்தின் 5 நிமிட சிங்கிள் ஷாட் வீடியோ ரிலீஸ்.. எல்லா புகழும் மன்மதனுக்கே!

சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொதுவாகவே சிம்பு சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என்பது ஒட்டுமொத்த சினிமா துறைக்கே தெரிந்த ஒன்று தான்.

ஆனால், அதனை ரசிகர்கள் பார்க்கும் படியான ஒரு மெர்சல் வீடியோவை தற்போது நடிகர் சிம்புவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் வெற்றி மாநாடு

சிம்புவின் வெற்றி மாநாடு

பல ஆண்டுகளாக சினிமாவில் சிம்பு எப்போ கம்பேக் கொடுப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.

ஒடிடி ரிலீஸ் எப்போ

ஒடிடி ரிலீஸ் எப்போ

மாநாடு படம் தியேட்டரில் 100 கோடி வசூலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒடிடி ரிலீஸ் எப்போ என்கிற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சோனி லைவ் ஒடிடி தளத்தில் சிம்புவின் மாநாடு வெளியாகிறது.

சிங்கிள் ஷாட் சண்டை

டி. ராஜேந்தரின் மகனான நடிகர் சிம்பு சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ரத்தத்திலே சினிமா கலந்து இருப்பதால் ஏகப்பட்ட படங்களில் சிம்பு சிங்கிள் டேக்கில் ஷாட்களை முடித்து கொடுத்து பாராட்டுக்களை அள்ளி உள்ளார். இந்நிலையில், மாநாடு படத்தில் சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட பாட்டில் சண்டை காட்சியை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். 20 நொடிகள் ஓடக் கூடிய அந்த காட்சியை விட தற்போது 5 நிமிடங்களுக்கு சிம்பு நடித்துள்ள காட்சி வெளியாகி மெர்சல் கிளப்பி உள்ளது.

மகா நடிகன்

மகா நடிகன்

நடிகர் எஸ்.ஜே. சூர்யா சிம்புவை கட்டிப் போட்டு வைத்து விட்டு சிம்புவின் நண்பர்களை எல்லாம் சுட்டுத் தள்ளும் காட்சியில் இன்னும் ஒரு முறை என்னை கொன்னுடுங்க சார்.. திரும்ப உங்க பக்கமே வர மாட்டேன். உங்க திட்டத்துக்கு தடையாக இருக்க மாட்டேன் என அனைத்து எக்ஸ்பிரசன்களையும் காட்டி நடிக்கும் 5 நிமிட காட்சியின் சிங்கிள் ஷாட் வீடியோவை நடிகர் சிம்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil

மன்மதன் சிங்கிள் ஷாட்

அந்த காட்சியை படமாக்கி முடித்தவுடன் இயக்குநர் வெங்கட் பிரபு சிம்புவை பாராட்ட எஸ்.ஜே. சூர்யா சிம்புவை தட்டிக் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கரெக்ட்டா வரும் போது மன்மதன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சியை பார்த்துட்டு வந்து தான் நடித்தேன் என சிம்பு வெளிப்படையாக பேசுவது ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X