twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்ப முயன்ற ரஷ்ய பெண்கள்படப்பிடிப்பில் பரபரப்பு!! மாதவன், பாவ்னா நடிக்கும் ஆர்யா படத்தின் சூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யாவை சேர்ந்த குட்டி கப்பலில் இருந்து 5 ரஷ்யா பெண்கைதிகள் தப்ப முயன்றனர். ஆர்யா படத்தை சென்னை துறைமுகத்தில் படம் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு அந்தப்பட யூனிட் அனுமதி வாங்கியது.இரவில் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாதவன், பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்டகாட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.அப்போது துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு சிறிய கப்பலிலிருந்து ஒரு பெண் கீழேஇறங்க முயன்றார். ஆனால் அவரை ஒருவர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றார்.அப்போது மேலும் நான்கு பெண்கள் கப்பலிலிருந்து இறங்க முயன்றனர்.அவர்களையும் சிலர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.கப்பலில் ஏதோ தப்பாக நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் துறைமுகஅதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கப்பலுக்குச் சென்றுகேப்டனிடம் பேசினர்.பின்னர் திரும்பி வந்த அதிகாரிகள் சொன்ன தகவல் படப் பிடிப்புக் குழுவினரைஅதிரச் செய்துவிட்டது.அந்த 5 பெண்களும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கு 17ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், தண்டனைக் காலமான 17 ஆண்டுகளும் இவர்கள்கப்பலிலேயேதான் இருக்க வேண்டுமாம். தரையில் இறங்க முடியாதாம்.17வருடத்திற்குப் பிறகுதான் கப்பலிலிருந்து இறக்கி விடப்படுவார்களாம்.இது குறித்து ஆர்யா படத்தின் தயாரிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில்,துறைமுகம் பாதுகாப்பான இடம். சூட்டிங் நடத்த அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும்கஷ்டப்பட்டு அனுமதி பெற்றேன். இரவில் படிப்பிடிப்பை நடத்தினோம். மாதவன்பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியை பட மாக்கினோம். இதற்காக துறைமுககடலோரம் ராட்சத விளக்குகளை பொறுத்தினோம்.அந்த விளக்கு வெளிச்சத்தில் கடலுக்குள் நின்ற குட்டி கப்பலில் நடந்த சம்பவத்தைபார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கப்பலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கினார்.அவரை ஒருத்தார் அடித்து கப்பலில் தூக்கிப் போட்டார். கப்பலுக்குள் இருந்த மேலும்4 பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.அவர்களையும் தலையில் அடித்து தாக்கினார்கள். சிறிது நேரத்தில் அந்த கப்பல்அங்கிருந்து புறப்பட்டது. ஏதோ விபரீதம் நடப்பதாக நினைத்து. உடனே துறைமுகஅதிகாரிகளிடம் தகவல் சொன்னோம்.அவர்கள் ஒரு படகு மூலம் அந்த கப்பலை அடைந்து கப்பலின் கேப்டனிடம் போய்பேசி விட்டு திரும்பி வந்து இந்த தகவலை சொன்னார்கள் என்றார்.ரஷ்யாவில் இப்படி தண்டனை ஏதும் உண்டா அல்லது துறைமுக அதிகாரிகளைஏமாற்ற கேப்டன் பிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.

    By Staff
    |

    மாதவன், பாவ்னா நடிக்கும் ஆர்யா படத்தின் சூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யாவை சேர்ந்த குட்டி கப்பலில் இருந்து 5 ரஷ்யா பெண்கைதிகள் தப்ப முயன்றனர்.

    ஆர்யா படத்தை சென்னை துறைமுகத்தில் படம் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு அந்தப்பட யூனிட் அனுமதி வாங்கியது.

    இரவில் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாதவன், பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்டகாட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு சிறிய கப்பலிலிருந்து ஒரு பெண் கீழேஇறங்க முயன்றார். ஆனால் அவரை ஒருவர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றார்.அப்போது மேலும் நான்கு பெண்கள் கப்பலிலிருந்து இறங்க முயன்றனர்.அவர்களையும் சிலர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.

    கப்பலில் ஏதோ தப்பாக நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் துறைமுகஅதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கப்பலுக்குச் சென்றுகேப்டனிடம் பேசினர்.

    பின்னர் திரும்பி வந்த அதிகாரிகள் சொன்ன தகவல் படப் பிடிப்புக் குழுவினரைஅதிரச் செய்துவிட்டது.

    அந்த 5 பெண்களும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கு 17ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் வேடிக்கை என்னவென்றால், தண்டனைக் காலமான 17 ஆண்டுகளும் இவர்கள்கப்பலிலேயேதான் இருக்க வேண்டுமாம். தரையில் இறங்க முடியாதாம்.17வருடத்திற்குப் பிறகுதான் கப்பலிலிருந்து இறக்கி விடப்படுவார்களாம்.

    இது குறித்து ஆர்யா படத்தின் தயாரிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில்,

    துறைமுகம் பாதுகாப்பான இடம். சூட்டிங் நடத்த அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும்கஷ்டப்பட்டு அனுமதி பெற்றேன். இரவில் படிப்பிடிப்பை நடத்தினோம். மாதவன்பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியை பட மாக்கினோம். இதற்காக துறைமுககடலோரம் ராட்சத விளக்குகளை பொறுத்தினோம்.

    அந்த விளக்கு வெளிச்சத்தில் கடலுக்குள் நின்ற குட்டி கப்பலில் நடந்த சம்பவத்தைபார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கப்பலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கினார்.அவரை ஒருத்தார் அடித்து கப்பலில் தூக்கிப் போட்டார். கப்பலுக்குள் இருந்த மேலும்4 பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.

    அவர்களையும் தலையில் அடித்து தாக்கினார்கள். சிறிது நேரத்தில் அந்த கப்பல்அங்கிருந்து புறப்பட்டது. ஏதோ விபரீதம் நடப்பதாக நினைத்து. உடனே துறைமுகஅதிகாரிகளிடம் தகவல் சொன்னோம்.

    அவர்கள் ஒரு படகு மூலம் அந்த கப்பலை அடைந்து கப்பலின் கேப்டனிடம் போய்பேசி விட்டு திரும்பி வந்து இந்த தகவலை சொன்னார்கள் என்றார்.

    ரஷ்யாவில் இப்படி தண்டனை ஏதும் உண்டா அல்லது துறைமுக அதிகாரிகளைஏமாற்ற கேப்டன் பிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X