»   »  சிக்கிய மாளவிகா, நமீதா!

சிக்கிய மாளவிகா, நமீதா!

Subscribe to Oneindia Tamil

வியாபாரி படப்பிடிப்பின்போது நமீதா, மாளவிகாவின் கிளாமர் அழகை ரசிக்க பெரும் ரசிகர் கூட்டம்திரண்டதால் போலீஸாரை கூப்பிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த நேரிட்டது.

எஸ்.ஜே.சூர்யாவின் பேர் பாடி நடிப்பில், ஷக்தி சிதம்பரத்தின் சதையோட்டமான இயக்கத்தில், மாளவிகா,நமீதா, தமன்னாவின் கலங்க வைக்கும் கிளாமரில் உருவாகும் படம் வியாபாரி.

மூன்று பேரில் நமீதாவின் ரோலை சின்னதாகத்தான் முதலில் வைத்திருந்தார் ஷக்தி சிதம்பரம். ஆனால் அவரதுகிளாமருக்குத்தான் கிராக்கியும், கிறக்கமும் ஜாஸ்தி இருக்கிறது என்பதால் நமீதா ரோலை ஸ்டிராங் பண்ணுமாறுஎஸ்.ஜே.சூர்யா அன்புக் கோ>க்கை வைத்தார். தட்டாத ஷக்தியும் நமீதாவை முழுப் படமும் வருகிற மாதிரி மாற்றிவிட்டார்.

சமீபத்தில் நமீதாவும், மாளவிகாவும் நடிக்கும் சில காட்சிகளை அவுட்டோரில் எடுத்தனர். இருவரும் நடிப்பதுதெ>ந்தால் ரசிகர்கள் கூடி விடுவார்கள், சிக்கலாகி விடும் என்பதால் படப்பிடிப்பை படு ரகசியமாகவைத்திருந்தனர்.

ஆனாலும் ரசிகப் பெருமக்களுக்கு நமீதாவின் வருகை குறித்த செய்தி பரவி படு வேகமாக திரண்டு விட்டனர்.சின்னப் பொடிசு முதல் பெருசு வரை குண்டக்க மண்டக்க வந்து விட்ட கூட்டத்தைப் பார்த்து நமீதாவை விடஷக்திதான் பயந்து போனார்.

ரசிகர்கள் கூட்டம் போகப் போக அதிகரிக்கவே, எதற்கும் இருக்கட்டும் என்று போலீஸுக்குத் தகவல் கொடுத்துகாவல்துறையினரை வரவழைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினார் ஷக்தி.

சொக்க வைக்கும் பேரழகுடன் நமீதாவை (காஸ்ட்யூம் வேறு ரொம்ப கிளாமர்!) படு பக்கத்தில் பார்த்துப் பதறிப்போன ரசிகர்கள் கூட்டம் அவரை தொட்டுப் பார்க்க முண்டியடிக்க ஆரம்பித்தது. நிலைமை கட்டுக்கடங்காமல்போவதை அறிந்த போலீஸார், லைட்டாக தட்டி ரசிகர்களை அமைதிப்படுத்தினர்.

அதன் பிறகு ரசிகர்களை தூர நிறுத்தி விட்டு, நமீதா, மாளவிகா சம்பந்தப்பட்ட ரகளைக் காட்சிகளை ரவுசாகஎடுத்து முடித்தாராம் ஷக்தி.

படம் முழுக்க கிளாமர் மழை பொழிந்திருப்பதால் எத்தனை காட்சிகளுக்கு சென்சார்காரர்கள் கத்திரி போடப்போகிறார்கள் என்று கோலிவுட்டில் பெட்டிங்கே நடக்கிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil