»   »  ஜோதிர்மயி-கேப்டன்-மாளவிகா தர்மபுரி படத்தைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிக்கப் போகும் படத்திற்கு சபரி என்றுபெயர் சூட்டியுள்ளனர். இதில் விஜயகாந்த்துக்கு இரண்டு ஜோடிகளாம்.கஜினி என்ற பிரமாண்டப் படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரன் அடுத்துதயாரிக்கும் படம்தான் சபரி. இந்தப் படத்தையும் மிகுந்த பொருட்செலவில்தயாரிக்கிறார் சந்துரு.கேப்டன் தான் ஹீரோ. இதில் அரசியலை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுநடிக்கப் போகிறாராம் விஜய்காந்த். படு வித்தியாசமான அதாவது புரட்சிகரமானடாக்டராக வருகிறாராம்.இப்படி ஒரு டாக்டர் ஊருக்கு ஒருத்தர் இருந்தா சமுதாயம் ஓஹோன்னு மாறி விடும்என்று நினைக்கும் அளவுக்கு அதிரடியான டாக்டராக வருகிறாராம் விஜயகாந்த்.படத்தில் தலைவருக்கு 2 ஜோடிகள். ஒருத்தர் ஜோதிர்மயி, இன்னொருத்தர் மாளவிகா.பெரியார் படத்தைத் தவிர ஜோதிர் மயிக்கு பெரிதாகப் படங்கள் இல்லை. சுமமாகிடந்த அவரிடம் கேப்டனுடன் ஜோடி போடவர்ரியளா என்று கேட்க உடனே ஆட்டிவிட்டாராம் தலையை.அதேபோல மாளவிகாவிடமும் கேட்க அவரும் ஓ.கே. சொல்லியுள்ளார்.இப்படத்திற்கு கிரைம் கதை மன்னன் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.மணிசர்மா இசையமைக்கிறார்.படத்தை இயக்குபவர் சுரேஷ். இவர் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் ஆகியபடங்களை இயக்கியவர் தான். இவரை விஜய்காந்துக்கு ரெக்கமண்ட் செய்ததேசரத்குமார் தானாம்.சபரியில் அரசியல் சுத்தமாக இருக்காதாம். ஆனால் சமுதாயத்துக்குத் தேவையானகருத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்குமாம். இதற்காக பக்கம் பக்கமாக பக்காவாகவசனம் எழுதிக் கொணடிருக்கிறார்களாம்.டாக்டர் ஊசி போடுற நேரத்தை விட பேசுற நேரம் ரொம்ப அதிகமா இருக்குமாம்.அரசியல் இல்லாவிட்டாலும் கூட விஜயகாந்த்தின் புருவச்சுழிப்பு, கண் கொதிப்பு,வாய் கடிப்பு, நாடி புடைப்பு, அடிக்குரல் வசனம் ஆகிய வழக்கமான ஐட்டங்கள்எல்லாம் கட்டாயம் இருக்கும் என நம்பலாம்.சமீபத்தில் படத்துக்கான ஸ்டில் செஷன் நடந்தது. ஸ்டில்களைப் பார்த்தால் ஜோதிர்மயிக்கு வெயிட்டான ரோல்என்று தெரிகிறது. மாளவிகா குத்தாட்டத்துக்கு வந்து போவார் போல.அரசியலில் தீவிரமாகி விட்டதால் இனிமேல் சொந்தப் படங்களில் மட்டும்தான்நடிப்பேன் என்றுமுன்பு கூறியிருநதார் விஜயகாந்த். ஆனால் இப்போது வெளிப்படங்களில் அதிக அளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.இதற்குப் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் கொட்டிவிட டப்பு ரொம்ப தேவை என்பதால்தான் ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக்கொண்டு அட்வான்ஸை வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த்என்கிறார்கள்.அப்படியா விஷயம்?

ஜோதிர்மயி-கேப்டன்-மாளவிகா தர்மபுரி படத்தைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிக்கப் போகும் படத்திற்கு சபரி என்றுபெயர் சூட்டியுள்ளனர். இதில் விஜயகாந்த்துக்கு இரண்டு ஜோடிகளாம்.கஜினி என்ற பிரமாண்டப் படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரன் அடுத்துதயாரிக்கும் படம்தான் சபரி. இந்தப் படத்தையும் மிகுந்த பொருட்செலவில்தயாரிக்கிறார் சந்துரு.கேப்டன் தான் ஹீரோ. இதில் அரசியலை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுநடிக்கப் போகிறாராம் விஜய்காந்த். படு வித்தியாசமான அதாவது புரட்சிகரமானடாக்டராக வருகிறாராம்.இப்படி ஒரு டாக்டர் ஊருக்கு ஒருத்தர் இருந்தா சமுதாயம் ஓஹோன்னு மாறி விடும்என்று நினைக்கும் அளவுக்கு அதிரடியான டாக்டராக வருகிறாராம் விஜயகாந்த்.படத்தில் தலைவருக்கு 2 ஜோடிகள். ஒருத்தர் ஜோதிர்மயி, இன்னொருத்தர் மாளவிகா.பெரியார் படத்தைத் தவிர ஜோதிர் மயிக்கு பெரிதாகப் படங்கள் இல்லை. சுமமாகிடந்த அவரிடம் கேப்டனுடன் ஜோடி போடவர்ரியளா என்று கேட்க உடனே ஆட்டிவிட்டாராம் தலையை.அதேபோல மாளவிகாவிடமும் கேட்க அவரும் ஓ.கே. சொல்லியுள்ளார்.இப்படத்திற்கு கிரைம் கதை மன்னன் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.மணிசர்மா இசையமைக்கிறார்.படத்தை இயக்குபவர் சுரேஷ். இவர் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் ஆகியபடங்களை இயக்கியவர் தான். இவரை விஜய்காந்துக்கு ரெக்கமண்ட் செய்ததேசரத்குமார் தானாம்.சபரியில் அரசியல் சுத்தமாக இருக்காதாம். ஆனால் சமுதாயத்துக்குத் தேவையானகருத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்குமாம். இதற்காக பக்கம் பக்கமாக பக்காவாகவசனம் எழுதிக் கொணடிருக்கிறார்களாம்.டாக்டர் ஊசி போடுற நேரத்தை விட பேசுற நேரம் ரொம்ப அதிகமா இருக்குமாம்.அரசியல் இல்லாவிட்டாலும் கூட விஜயகாந்த்தின் புருவச்சுழிப்பு, கண் கொதிப்பு,வாய் கடிப்பு, நாடி புடைப்பு, அடிக்குரல் வசனம் ஆகிய வழக்கமான ஐட்டங்கள்எல்லாம் கட்டாயம் இருக்கும் என நம்பலாம்.சமீபத்தில் படத்துக்கான ஸ்டில் செஷன் நடந்தது. ஸ்டில்களைப் பார்த்தால் ஜோதிர்மயிக்கு வெயிட்டான ரோல்என்று தெரிகிறது. மாளவிகா குத்தாட்டத்துக்கு வந்து போவார் போல.அரசியலில் தீவிரமாகி விட்டதால் இனிமேல் சொந்தப் படங்களில் மட்டும்தான்நடிப்பேன் என்றுமுன்பு கூறியிருநதார் விஜயகாந்த். ஆனால் இப்போது வெளிப்படங்களில் அதிக அளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.இதற்குப் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் கொட்டிவிட டப்பு ரொம்ப தேவை என்பதால்தான் ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக்கொண்டு அட்வான்ஸை வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த்என்கிறார்கள்.அப்படியா விஷயம்?

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி படத்தைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிக்கப் போகும் படத்திற்கு சபரி என்றுபெயர் சூட்டியுள்ளனர். இதில் விஜயகாந்த்துக்கு இரண்டு ஜோடிகளாம்.

கஜினி என்ற பிரமாண்டப் படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரன் அடுத்துதயாரிக்கும் படம்தான் சபரி. இந்தப் படத்தையும் மிகுந்த பொருட்செலவில்தயாரிக்கிறார் சந்துரு.

கேப்டன் தான் ஹீரோ. இதில் அரசியலை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுநடிக்கப் போகிறாராம் விஜய்காந்த். படு வித்தியாசமான அதாவது புரட்சிகரமானடாக்டராக வருகிறாராம்.

இப்படி ஒரு டாக்டர் ஊருக்கு ஒருத்தர் இருந்தா சமுதாயம் ஓஹோன்னு மாறி விடும்என்று நினைக்கும் அளவுக்கு அதிரடியான டாக்டராக வருகிறாராம் விஜயகாந்த்.


படத்தில் தலைவருக்கு 2 ஜோடிகள். ஒருத்தர் ஜோதிர்மயி, இன்னொருத்தர் மாளவிகா.பெரியார் படத்தைத் தவிர ஜோதிர் மயிக்கு பெரிதாகப் படங்கள் இல்லை. சுமமாகிடந்த அவரிடம் கேப்டனுடன் ஜோடி போடவர்ரியளா என்று கேட்க உடனே ஆட்டிவிட்டாராம் தலையை.

அதேபோல மாளவிகாவிடமும் கேட்க அவரும் ஓ.கே. சொல்லியுள்ளார்.இப்படத்திற்கு கிரைம் கதை மன்னன் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.மணிசர்மா இசையமைக்கிறார்.

படத்தை இயக்குபவர் சுரேஷ். இவர் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் ஆகியபடங்களை இயக்கியவர் தான். இவரை விஜய்காந்துக்கு ரெக்கமண்ட் செய்ததேசரத்குமார் தானாம்.


சபரியில் அரசியல் சுத்தமாக இருக்காதாம். ஆனால் சமுதாயத்துக்குத் தேவையானகருத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்குமாம். இதற்காக பக்கம் பக்கமாக பக்காவாகவசனம் எழுதிக் கொணடிருக்கிறார்களாம்.

டாக்டர் ஊசி போடுற நேரத்தை விட பேசுற நேரம் ரொம்ப அதிகமா இருக்குமாம்.

அரசியல் இல்லாவிட்டாலும் கூட விஜயகாந்த்தின் புருவச்சுழிப்பு, கண் கொதிப்பு,வாய் கடிப்பு, நாடி புடைப்பு, அடிக்குரல் வசனம் ஆகிய வழக்கமான ஐட்டங்கள்எல்லாம் கட்டாயம் இருக்கும் என நம்பலாம்.

சமீபத்தில் படத்துக்கான ஸ்டில் செஷன் நடந்தது. ஸ்டில்களைப் பார்த்தால் ஜோதிர்மயிக்கு வெயிட்டான ரோல்என்று தெரிகிறது. மாளவிகா குத்தாட்டத்துக்கு வந்து போவார் போல.


அரசியலில் தீவிரமாகி விட்டதால் இனிமேல் சொந்தப் படங்களில் மட்டும்தான்நடிப்பேன் என்றுமுன்பு கூறியிருநதார் விஜயகாந்த். ஆனால் இப்போது வெளிப்படங்களில் அதிக அளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

இதற்குப் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் கொட்டிவிட டப்பு ரொம்ப தேவை என்பதால்தான் ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக்கொண்டு அட்வான்ஸை வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த்என்கிறார்கள்.

அப்படியா விஷயம்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil