இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்
Recommended Video

சென்னை: இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து நடிகை மாளவிகா மேனன் அடம்பிடித்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பாடல் காட்சி
அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக பாடலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கினார்கள்.

பாடல்
ஹீரோயினை அறிமுகப்படுத்தும் 'ஆற்றில் ஒரு மீனாக' பாடலை படமாக்கியபோது இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து அடம்பிடித்தார் மாளவிகா மேனன்.

பிரச்சனை
கவர்ச்சி உடை என்றீர்கள் ஆனால் நீ கூறியதை விட இந்த உடை சிறியதாக உள்ளது. இது போன்ற உடையை நான் அணிய மாட்டேன் என்று மாளவிகா கூறினார்.

பரபரப்பு
உடை பிரச்சனையால் மாளவிகா அடம்பிடித்ததால் படப்பிடிப்பு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் வேறு ஒரு உடையை கொண்டு வந்து கொடுத்த பின் பிரச்சனை தீர்ந்தது.


Click it and Unblock the Notifications











