மாளவிகா பட சூட்டிங் ஸ்பாட்டில் தீ மாளவிகா நடிக்கும் திருட்டுப் பயலே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சந்திரமுகியில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்த மாளவிகா இப்போது மீண்டும் சில படங்களில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக்களைப் பிடித்துள்ளார். இதில் ஒரு படம் தான் திருட்டுப் பயலே. இதில் ஹீரோவாக நடிப்பது காக்க..காக்க.. வில்லனான ஜீவன். படத்தை இயக்குவது சுசி கணேசன். இதில் பிரகாஷ்ராஜின் மனைவியாக மாளவிகா நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜீவா-மாளவிகா காதல் கதை வருமாம். இந்தப் படத்தின் சூட்டிங் நேற்று சென்னை அண்ணா நகரில் ஒரு பங்களாவில் நடந்தது. காட்சிப்படி மாளவிகாவின் பங்களாவுக்குள் நுழையும் ஜீவன், அங்குள்ள ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்க வேண்டும். ஷோபாவை கிழித்து எறிய வேண்டும். அருகில் இருக்கும் மாளவிகா அலறுவார். ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்கும்போது ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தீப் பொறியை பறக்கச் செய்ய, அதில் சிறிய வெடி வைக்கப்பட்டது. அதே போல ஷோபாவை அவர் கிழித்து எறியும்போது அதிலிருந்து பஞ்சு பறக்கும் வகையில் காட்ட தனியாக பஞ்சை பறக்க விட்டனர். கேமரா ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்க அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, ஷோபாவில் இருந்த பஞ்சில் பட்டு தீப் பிடித்துக் கொண்டதாம். பஞ்சு என்பதால் அதி வேகத்தில் தீ பரவ, அந்த அறையில் களேபரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாம். தீயைக் கண்டு பயந்து உண்மையிலேயே மாளவிகா அலற பாதுகாப்பாக அவரை வெளியே கொண்டு வந்தார்களாம். இதைத் தொடர்ந்து சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது. இந்தப் படம் தவிர ராம நாராயணன் இயக்கும் பாசக் கிளிகள் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. இதற்கு கதை வசனம் எழுதுவது திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நவ்யா நாயர், முரளி, ரோஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, பொள்ளாச்சி, மைசூர் பக்கம் நடக்கவுள்ளது. மேலும் மலையாளத்தில் அற்புதத் தீவு என்ற மாயாஜால படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா. இது விரைவில் தமிழுக்கும் வரப் போகிறதாம். விக்ரம் நடித்த காசியை இயக்கிய வினயன் தான் இதை டைரக்ட் செய்திருக்கிறார். மாளவிகா பற்றி ஒரு கம்ப்ளைன்ட். சென்னை வரும்போது அவர் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார். ஆனால், மும்பைக்குப் போய்விட்டால் வீட்டுக்கு நிருபர்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு பேட்டி தருகிறார். இதற்கான காரணம் குறித்து விசாரித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது? இந்தியில் ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார் மாளவிகா. சென்னையில் இவரை சந்திக்கும் நிருபர்கள் அது குறித்தே கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் தான் இந்த தவிர்ப்பாம். ரொம்ப நல்லாயிருக்கு...

By Staff

மாளவிகா நடிக்கும் திருட்டுப் பயலே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சந்திரமுகியில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்த மாளவிகா இப்போது மீண்டும் சில படங்களில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக்களைப் பிடித்துள்ளார்.

இதில் ஒரு படம் தான் திருட்டுப் பயலே. இதில் ஹீரோவாக நடிப்பது காக்க..காக்க.. வில்லனான ஜீவன். படத்தை இயக்குவது சுசி கணேசன்.

இதில் பிரகாஷ்ராஜின் மனைவியாக மாளவிகா நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜீவா-மாளவிகா காதல் கதை வருமாம்.


இந்தப் படத்தின் சூட்டிங் நேற்று சென்னை அண்ணா நகரில் ஒரு பங்களாவில் நடந்தது.

காட்சிப்படி மாளவிகாவின் பங்களாவுக்குள் நுழையும் ஜீவன், அங்குள்ள ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்க வேண்டும். ஷோபாவை கிழித்து எறிய வேண்டும். அருகில் இருக்கும் மாளவிகா அலறுவார்.

ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்கும்போது ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தீப் பொறியை பறக்கச் செய்ய, அதில் சிறிய வெடி வைக்கப்பட்டது. அதே போல ஷோபாவை அவர் கிழித்து எறியும்போது அதிலிருந்து பஞ்சு பறக்கும் வகையில் காட்ட தனியாக பஞ்சை பறக்க விட்டனர்.

கேமரா ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்க அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, ஷோபாவில் இருந்த பஞ்சில் பட்டு தீப் பிடித்துக் கொண்டதாம். பஞ்சு என்பதால் அதி வேகத்தில் தீ பரவ, அந்த அறையில் களேபரம் ஏற்பட்டுள்ளது.


உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாம். தீயைக் கண்டு பயந்து உண்மையிலேயே மாளவிகா அலற பாதுகாப்பாக அவரை வெளியே கொண்டு வந்தார்களாம். இதைத் தொடர்ந்து சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது.

இந்தப் படம் தவிர ராம நாராயணன் இயக்கும் பாசக் கிளிகள் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. இதற்கு கதை வசனம் எழுதுவது திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நவ்யா நாயர், முரளி, ரோஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, பொள்ளாச்சி, மைசூர் பக்கம் நடக்கவுள்ளது.

மேலும் மலையாளத்தில் அற்புதத் தீவு என்ற மாயாஜால படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா. இது விரைவில் தமிழுக்கும் வரப் போகிறதாம். விக்ரம் நடித்த காசியை இயக்கிய வினயன் தான் இதை டைரக்ட் செய்திருக்கிறார்.


மாளவிகா பற்றி ஒரு கம்ப்ளைன்ட். சென்னை வரும்போது அவர் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார். ஆனால், மும்பைக்குப் போய்விட்டால் வீட்டுக்கு நிருபர்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு பேட்டி தருகிறார்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது?

இந்தியில் ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார் மாளவிகா. சென்னையில் இவரை சந்திக்கும் நிருபர்கள் அது குறித்தே கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் தான் இந்த தவிர்ப்பாம்.

ரொம்ப நல்லாயிருக்கு...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X